Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தென்காசி திருமலை குமாரசாமி கோவிலில் மோகன்லால் வேல் காணிக்கை

Mohanlal visits Tenkasi Thirumalai Kumaraswamy Temple : நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான துடரும் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் தென்காசி பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

தென்காசி திருமலை குமாரசாமி கோவிலில் மோகன்லால் வேல் காணிக்கை
மோகன்லால்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 May 2025 23:27 PM

நடிகர் மோகன்லால் (Mohanlal) நடிப்பில் 2025 ஆம் ஆண்டு எல் 2: எம்புரான் மற்றும் துடரும் ஆகிய இரு படங்கள் வெளியாகின. இதில் துடரும் (தமிழில் தொடரும்)திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஷோபனா (Shobana) நடிக்க பிரகாஷ் வர்மா, பினு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் மோகன்லாலுக்கு இன்னொரு திரிஷ்யம் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.

தென்காசி பண்பொழி முருகன் கோவிலில் மோகன்லால் தரிசனம்

நடிகர் மோகன்லால் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி கோவிலில் மே 29, 2025 அன்று மலையாள நடிகர் மோகன்லால் சமி தரிசனம் செய்தார். மேலும் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அருள்மிகு திருமலைக்குமார சாமி திருக்கோவிலுக்கு செம்பு வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்கினார். இந்த நிலையில் அவருடன் ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

துடரும் படத்தக்காக டீஜேிங் செய்யப்பட்ட மோகன்லால் மற்றும் பாரதிராஜா

 

 

View this post on Instagram

 

A post shared by Mohanlal (@mohanlal)

துடரும் படத்தில் நடிகர் மோகன்லால் ஸ்டண்ட் கலைஞராக நடித்திருப்பார். இந்தப் படத்தில் சென்னையில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றிய மோகன்லால் பின்னர் கேரளாவிற்கு திரும்பி செல்வார். அங்கு அவர் குடும்பத்துடன் எளிமையாக வாழ்ந்து வரும்போது நடக்கும் சம்பவங்களே துடரும் படத்தின் கதை. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் ஸ்டண்ட் கலைஞராக இயக்குநர் பாரதிராஜாவின் படத்தில் வேலை பார்ப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருக்கும். இருவரையும் டிஜேங் செயப்பட்டு இளம் பாரதிராஜா மற்றும் மோகன்லாலை படத்தில் காட்சியிருப்பார்கள். இந்த நிலையில் அதனை மோகன்லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்

 

 

View this post on Instagram

 

A post shared by Mohanlal (@mohanlal)

மோகன்லால் தற்போது ஹிருதயபூர்வம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். மேலும் பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான சங்கீத் பிரதாப், எஸ்பிபி சரண் ஆகியோர்  இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.