AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழில் இருந்து வந்ததா கன்னடம்? கமல் பேசியது சரியா? ஆதாரத்துடன் பதிவிட்ட நடிகை திவ்யா

Divya Spandana Supports Kamal Haasan: தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானது. கன்னட அமைப்புகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா கமலுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ஆதராத்துடன் பதிவிட்டுள்ளார்.

தமிழில் இருந்து வந்ததா கன்னடம்? கமல் பேசியது சரியா? ஆதாரத்துடன் பதிவிட்ட நடிகை திவ்யா
கமல்ஹாசன் - திவ்யா ஸ்பந்தனா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 May 2025 21:59 PM IST

கடந்த மே 24, 2025 அன்று தக் லைஃப் (Thug Life) பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan), கன்னட நடிகர் சிவராஜ்குமாரை (Shiva Rajkumar) குறிப்பிட்டு தமிழில் இருந்து பிறந்தது அவரது மொழி என பேசியிருந்தார். இந்த நிலையில் அவரது பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது தக் லைஃப் பட போஸ்டரை கிழித்ததோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பேசினர். இந்த நிலையில் மே 28, 2025 அன்று கேரளாவில் நடைபெற்ற தக் லைஃப் பட புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ‘வடக்கில் இருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் தென் குமரியில் இருந்து பார்த்தால் நான் சொல்வதே சரி. இதற்கு இன்னொரு கோணமும் இருக்கும். எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாற்றையே பேசினேன். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது’ என்று பேசியிருந்தார்.

கமலுக்கு ஆதரவாக பதிவிட்ட நடிகை திவ்யா

இந்த நிலையில் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா ஸ்பந்தனா கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த நிலையில் அவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கமல்ஹாசன் சொல்வதாக நான் நினைப்பது கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டவை திராவிட மொழிகள் என நினைக்கிறேன். நாம் மொழியியல் வம்சாவளியையும் பொதுவான தன்மையைம் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் அவரை புறக்கணிப்பது சற்று அதிகமாக கருதுகிறேன். தவறு மன்னிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.

கமல் பேசியது தொடர்பாக ஆதாரத்தை பகிர்ந்த திவ்யா

 

நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

 

இந்த நிலையில் போட்டோ ஒன்றையும் திவ்யா பகிர்ந்திருந்தார். அதில், திராவிடமொழிகள் என்பது 4 வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழ், கன்னடம் மற்றும் துளு ஆகிய மொழிகளிலும் நடுப்பகுதியில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ் – கன்னட மொழிகள் இரண்டாக பிரிந்து தமிழ் – கொடகு ஒரு பக்கமும், கன்னடம் இரண்டாக பிரிந்து கன்னடம், படகா என்றும் பிரிகிறது. அதே போல தமிழ் – கொடகு மொழிகளில் இருந்து தமிழ், மலையாளம், கொடகு, தொடா ஆகிய மொழிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் கமல் குறிப்பிட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us