தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. தடுப்பது எப்படி? சுகாதாரத்துறை முக்கிய தகவல்!
Tamil Nadu Dengue Outbreak : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. டெங்கு பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 1: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக (Tamil Nadu Dengue Fever Outbreak) தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், ஒரு நாளைக்கு 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலும் அடித்து வருகிறது. இப்படியாக வானிலை மாறி மாறி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு சளி, காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற கிளைமேட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தினமும் ஒரு நாளைக்கு 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Also Read : டெல்டா டூ வட மாவட்டங்கள்.. கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி?




எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, பொதுமக்கள் வீட்டில் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு பரவலை தடுப்பது எப்படி?
கொசுக்கள் மூலம் பரவுவது தான் டெங்கு காய்ச்சல். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, சோர்வு போன்ற டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். டெங்கு காய்ச்சல் குணமடைய ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் ஆகும். மக்கள் தங்களை கொசுக்கள் கடிக்காமல் பாதுகாத்து கொள்ளுங்கள். முழு உடலை மூடு வகையில், ஆடைகளை அணியுங்க்ள. வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது சிறந்தது.
Also Read : சிறை டூ அபராதம்.. பெண்களை மிரட்டினால் அவ்வளவு தான்… காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!
மேலும், கொசுவிரட்டி ஜெல், கொசுவிரட்டி பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். மேலும், வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், வீடுகளை கொசு பரவல் இருந்தால் ஜன்னல்களை மூடி வைக்கவும். வீட்டில் இருக்கும் குப்பைகள் அப்புறுத்த வேண்டும். மேலும், வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.