பட்டப்பகலில் அதிர்ச்சி.. பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. இளைஞர் கைது!
Chennai Perungudi Railway Station Chain Snatching : சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணின் அருகில் சாவகாசமாக அமர்ந்து, தங்கச் செயின் பறிப்பில் இளைஞர் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு, அந்த இளைஞர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். பெண்ணிடம் செயின் பறித்த விழுப்பரத்தைச் சேர்ந்த பாபாஜி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, ஜூலை 30 : சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் (Perungudi Railway Station) ரயிலுக்கான காத்திருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் ஜெயின் பறிப்பில் ஈடுபட்ட (Chain Snatching) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது. பேச்சுவார்த்தை கொடுத்து, பெண்ணுக்கு அருகில் அமர்ந்து, அவர் அணிந்திருந்த தங்க செயினை அவர் பறித்து சென்றுள்ளார். இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சமீப நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறி வருகிறது. இதனால், பலரும் உயிரிழந்தும் வருகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், 2025 ஜூலை 29ஆம் தேதியான நேற்று பெருங்குடி ரயில் நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, ரயிலுக்கான காத்திருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் பெருங்குடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பெண் ஒருவர் பெருங்குடி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். ரயில் நிலையத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தார். அங்கு பெரிய அளவில் பயணிகள் கூட்டம் இல்லை.
Also Read : எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை.. அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பின் நிகிதா பேட்டி..
இதனை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு அருகில் வந்தார். பெண்ணிடம் பேச்சு கொடுத்த அவர், அந்த பெண்ணுக்கு அருகில் அமர்ந்தார். அந்த பெண் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகைகை பறிக்க முயன்றார்.
பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
இதனால், உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண், நகையை பறிக்க விடாமல் தடுத்தார். இருப்பினும், அந்த இளைஞர் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனை அடுத்து, அந்த பெண் கூச்சலிட்டார். அருகில் யாரும் இல்லாததால், அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியடைய வைத்தது.
Also Read : திருப்பூரில் பயங்கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!
இதனால், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களில் ஆள்நடமாட்டம் குறைவாக இருப்பதால், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.