Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளியின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்

Tirunelveli Honour Killing : நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கவின்குமார் மரணத்திற்கு நீதி கோரி உறவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளியின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி ஆணவக் கொலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jul 2025 15:51 PM

நெல்லை, ஜூலை 29 : திருநெல்வேலி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை (Tirunelveli Honour Killing) செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தம்பதியான இருவரும் தலைமறைவாகி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். தம்பதி இருவரும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார் (26).

இவரும் சுர்ஜித்தின் தங்கையும் இருவரும் பள்ளியில் இருந்தே காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. கவின்குமார் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சென்னையில் வேலை பார்க்கும் இவர், அவ்வப்போது, சொந்த ஊருக்கு வந்து சென்று வந்தார். மேலும், காதலியை சந்தித்து பேசிவிட்டு சென்று வந்திருக்கிறார். இந்த காதல் விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read : ’கார் சாவியை அஜித்குமார் வாங்கவில்லை’ – காவலாளி முருகன்.. மடப்புரம் வழக்கில் புதிய திருப்பம்..

கொலையாளியின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்

இந்த நிலையில், 2025 ஜூலை 27ஆம் தேதி கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்து கொண்டு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த பெண்ணின் சகோதர் சுர்ஜித், கவின்குமாரை தனியாக அழைத்து பேசியார்.

அப்போது, திடீரென இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுர்ஜித் , கவிக்குமாரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லையில் நடந்த ஆணவக் கொலை மாநிலத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து, சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!

நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சுர்ஜித் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றம் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கிடையில் தான், சுர்ஜித்தின் பெற்றோர் தலைமறைவாக உள்ளனர்.

அவரை காவல் ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமார் ஆகியோரை தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஜஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், நீதி கோரி கவின்குமார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.