Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற 17 வயது சிறுவன்.. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்..

Tirunelveli Crime News: இரு தரப்பு மோதலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார் மீது 17 வயது சிறுவன் அரிவாளால் தாக்க முயற்சி செய்ததன் காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மற்றும் தற்காப்புக்காக போலீசார் சிறுவனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற 17 வயது சிறுவன்.. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்..
கோப்பு புகைப்ப்டம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jul 2025 14:04 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை நிறுத்துவதற்காகவும், பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் போலீஸார்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சமத்துவப்புரத்தை பூர்வீகமாக கொண்ட சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார் அவருக்கு வயது 22 ஆகும். அவர் தற்போது ரஸ்தாவூர் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த இரண்டு இளம் சிறார்கள் சக்திகுமார் என்பவரை ஊருக்கு வெளிப்புறத்தில் இருக்கும் குளத்திற்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அவரிடம் தாங்கள் செய்யும் குற்றத்தை ரவுடித்தனத்தை எப்படி போலீசாரிடம் தெரிவிக்கலாம் என ஆத்திரத்துடன் பேசி உள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட இளஞ்சிறார்கள்:

அப்போது இளஞ்சிறார்களிடமிருந்த அரிவாள் கொண்டு சக்திகுமாரை கடுமையாக தாக்க முயற்சி செய்தனர் அப்போது அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது பின்னர் கொலை முயற்சியில் ஈடுபட்ட 17 வயதுடைய சிறுவர்களிடமிருந்து தப்பித்து செல்வதற்காக சக்திகுமார் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளார். அப்போதும் சக்தி குமாரை விடாமல் இருவரும் துரத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவு நடைபெறவே அப்பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போலீஸாரை தாக்க முயன்ற சிறுவர்கள்:

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் ரோந்து பணி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளஞ்சிறார்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்கி சமரசம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது சிறுவருடம் இருந்த அறிவாளால் காவல்துறையினர் நோக்கி ஆக்ரோஷமாக தாக்க முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிலமையை கட்டுக்குள் கொண்டு வரவும் பாதுகாப்பு கருத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக 17 வயது சிறுவனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும் படிக்க: திருநெல்வேலி கவின்குமார் ஆணவப்படுகொலை.. போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு..

இதில் அந்த சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். உடனடியாக அந்த சிறுவனை மீட்டு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட அங்கு அச்சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சிறுவன் தப்பி ஓடியுள்ளார்

இந்த இரண்டு இளஞ்சிரார்களும் ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.