Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் 5 மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு

Dengue Fever Surge in Tamil Nadu: கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்தில் 7,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் நோய் பரவல் அதிகரித்துள்ளது. தினசரி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 5 மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் 5 மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 03 Jun 2025 07:32 AM

சென்னை ஜூன் 03: தமிழகத்தில் (Tamilnadu) கடந்த ஐந்து மாதங்களில் 7,500 பேர் டெங்கு காய்ச்சலால் (7,500 people infected with dengue fever) பாதிக்கப்பட்டு, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்துள்ளன. தினமும் 30க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்தம் பேணிக் கொசு உற்பத்தியை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

ஐந்து மாதங்களில் 7,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் பரவல் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு, இன்ப்ளூயன்ஸா மற்றும் கொரோனா போன்ற வைரஸ் நோய்களும் நாடு முழுவதும் தொற்றுவிக்கின்றன.

தினசரி 100 பேர் வரை இந்த வகை காய்ச்சல்களால் பாதிப்பு

சுகாதாரத்துறையின் தகவலின்படி, தமிழகம் முழுவதும் தினசரி 100 பேர் வரை இந்த வகை காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, ஏடிஸ்-ஏஜிப்டி (Aedes aegypti) எனும் கொசு வகை மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தினமும் 30 பேருக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோயின் ஆரம்ப நிலையை உணராமல், தாமதமாக மருத்துவமனையை நாடிய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

https://tnhealth.tn.gov.in/tngovin/dph/dphdbdengue.php

கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு உயர்வு

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ‘ஒசல்டாமிவிர்’ உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இரண்டு நாளுக்கு மேல் தொடருமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது உயிரைக் காக்கும் முக்கியமான கட்டமாகும்.”

மேலும், மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசு உற்பத்தியாகாத வகையில் தேங்கிய நீரை அகற்றும் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள், காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச எண்ணை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, போதிய படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.