AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழை ஓவர்… அடுத்த 5 நாட்களுக்கு பொளக்கப்போகும் வெயில்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால், மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்த நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மழை ஓவர்… அடுத்த 5 நாட்களுக்கு பொளக்கப்போகும் வெயில்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
வெயில்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Jun 2025 06:36 AM IST

சென்னை, ஜூன் 03 : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என வானிலை மையம் (tamil nadu imd weather forecast) தெரிவித்தள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு (chennai weather update) வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே மாதத்தில் நல்ல மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையானது 2025 மே 30ஆம் தேதியுடன் ஓய்ந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. மழையின் தாக்கம் குறைந்ததால், வெயில் கடுமையாக உள்ளது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அடுத்த 5 நாட்களுக்கு கொளக்கப்போகும் வெயில்

அதன்படி, மேற்கு காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதோடு, 2025 ஜூன் 3ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், தமிழகத்தல் ஓரிரு பகுதியில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம் என்ன?


2025 ஜூன் 3ஆம் தேதி சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டடத்துடன் இருக்கும் எனவும் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துளளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை


தமிழகத்தில் கடநத் 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, வேலூரில் 39 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.7 டிகிரி செல்சியஸ், பரங்கிபேட்டையில் 38 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை 38.2 டிகிரி செல்சியஸ், மதுரை நகரத்தில் 38.4டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. சென்னையில் மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us