Tamil Nadu News Live Updates: கட்சியை யாரும் உரிமை கோர முடியாது.. ராமதாஸ் திட்டவட்டம்
Tamil Nadu Breaking news Today 2 August 2025, Live Updates: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கட்சியை யாரும் உரிமை கோர முடியாது என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

LIVE NEWS & UPDATES
-
‘தந்தையை வேவு பார்த்த மகன்’ – ராமதாஸ் கடும் விமர்சனம்
தைலாபுரம் வீட்டில் உளவுக் கருவிகள் வைத்து உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார். மேலும், தான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது எனவும் கூறியுள்ளார்.
-
ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி. தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக சரிந்துள்ளது.
-
கட்சி பணிகளை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்
மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக தனது கட்சி பணிகளை தொடங்கி உள்ளார். உடன் பிறப்பே வா என்ற நிகழ்ச்சியின் மூலம், உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாக தெரிகிறது.
-
வன்னியர் உள் ஒதுக்கீடு – தமிழக அரசு நடவடிக்கை
வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 ஜூலை 11ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
‘தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறிவிடும்’ திருமாவளவன்
வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால், மாநிலத்தின் அரசியல் தலைகீழாக மாறிவிடும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். புதிய வாக்காளர்கள் சேர்ப்பதாக கூறி, வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
பாம்பு கடித்து 9ஆம் வகுப்பு மாணவர் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டியூஷன் படிக்க சென்ற வீட்டில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த போது, பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
திமுக எம்.பி – எம்எல்ஏ வாக்குவாதம்
தேனி ஆண்டிபட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேடையில் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் – ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வரவேற்பு பேனரில் எம்எல்ஏ படம் மட்டும் இடம்பெற்றிருந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் கோபம் அடைந்துள்ளதாக தெரிகிறது. எனவே, நலத்திட்ட உதவி அட்டைகளை நான் தான் வழங்குவேன் என எம்எல்ஏ மகாராஜன் பிடுங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
-
மாநாட்டிற்கு பதில் மக்கள் சந்திப்பு?
மாநாடு நடத்துவதற்கு பதில் மக்கள் சந்திப்பை நடத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 மண்டலங்களாக பிரித்து மாவட்ட வாரியாக மக்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பன்னீர்செல்வத்தை பாஜக தரப்பு சமாதானம் செய்ய முயன்று வருவதாக கூறப்படும் நிலையில், இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
-
விசாரணை கைதி தற்கொலை – 2 பேர் பணியிடை நீக்கம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
-
மல்லை சத்யா உண்ணாவிரம்
மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். வைகோ தன்னை துரோகி என விமர்சித்ததற்கு நீதி கேட்டு, உண்ணாவிரதம் என மல்லை சத்யா அறிவித்திருந்தார்.
-
முதல்வரை சந்தித்தது ஏன்? பிரேமலதா விளக்கம்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன் என்பது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “வெவ்வேறு கட்சியினர் சந்தித்தாலே கூட்டணி தானா? தேமுதிகவை பலப்படுத்தி வருகிறோம். இப்போது கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் 7,8 மாதங்கள் உள்ளன. இனி மக்கள் சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு தான் நடக்கும்” என கூறினார்.
-
கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் – முதல்வர் ஸ்டாலின்
கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்றும் கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் எண்ணற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு நிதி உதவி அளித்து மக்களை காக்கும் அரசாக நிரூபித்தோம் எனவும் கூறினார்.
-
கடமை, பெருமை புரிகிறது – எம்.பி கமல்ஹாசன்
நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய கடமை, பெருமை புரிகிறது என்றும் நாடாளுமன்றத்தை வெளியில் இருந்து பார்த்துள்ளோம். இப்போது உள்ளே இருந்து பார்க்கிறேன் என்றும் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய முனைப்பு நாடு, தமிழ்நாடு, அதுதான் என் பொறுப்பு. அதற்காகவே சென்றிருக்கிறேன் என தெரிவத்துள்ளார்.
-
நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளலாம்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்தது நீர்வரத்து!
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. இதனால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது. தற்போது 20,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.
-
தமிழக அரசின் மீது விவசாயிகள் கடும் கோபம்- அன்புமணி ராமதாஸ்!
தமிழக விவசாயிகளுக்கு திமுக கொடுத்த 11 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கவின் கொலைக்கு காவல் ஆய்வாளர் காரணமா? – காவல்துறை மறுப்பு
திருநெல்வேலியில் காதல் விவகாரத்தில் கவின் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மிரட்டிய ஒரு வாரத்தில் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக கவினின் தந்தை குற்றச்சாட்டியிருந்தார். ஆனால் காதல் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வரவில்லை எனவும், கவின் செல்வகணேஷிடம் எந்தவித சட்டவிரோதமான விசாரணையும் நடைபெறவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கவினின் தந்தை சந்திரசேகரன் பேசியது உண்மைக்கு புறம்பானது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
-
Premalatha Vijayakanth: தமிழ்நாடு முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அவர் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
-
சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணையும் பறக்கும் ரயில் சேவை
சென்னையில் பறக்கும் ரயில் சேவை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பலதரப்பு கோரிக்கைகள் எழுந்த நிலையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
கஞ்சா போதையில் தனது வீட்டில் ரகளை.. தட்டிக்கேட்டவர் கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போதையில் தனது வீட்டில் ரகளை செய்ததை தட்டிக் கேட்ட கண் பார்வையற்ற அருள்ராஜ் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சகோதரர் மாரி பாண்டியையும் கொலை செய்தது புதைத்து விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
-
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு 2025, ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வேலை நாளாக ஆகஸ்ட் 23ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
பராமரிப்பு பணி காரணமாக 19 மின்சார ரயில் சேவை ரத்து!
சென்னை சென்டிரல் – சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடந்து வருவதால் ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று 19 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.15 மணி முதல் மாலை 5. 15 மணி வரை நான்கு மணி நேரம் இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் படிக்க
-
TN Rain News Live: அடுத்த சில நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும் படிக்க
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் சென்னையில் 15 மண்டலங்களில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் 2026 பிப்ரவரி மாதம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான சிறப்பு முகாம் அரசு விடுமுறை இல்லாத சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.
-
Nalam Kakkum Stalin Scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – இன்று முதல் தொடக்கம்
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இதனை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாநகராட்சி, ஊரக பகுதிகள், குடிசை மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் ஆகஸ்டு 2-ந் தேதி சேவைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தபால் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 2.0 வருகிற ஆகஸ்டு 4ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,மயிலாடுதுறை, திருவாரூர்,விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, கடலூர் இராமநாதபுரம் என பல மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். மாமல்லப்புரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ல் நடைபெறும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதனிடையே அவரது தந்தை ராமதாஸ் ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published On - Aug 02,2025 7:00 AM