Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடலோரப்பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Aug 2025 06:57 AM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 2, 2025: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் நல்ல மழை இருந்தாலும் சென்னை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 37.8 டிகிரி செல்சியஸ், கரூரில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸ், வேலூரில் 37.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கொட்டப்போகும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில்?

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 2, 2025 தேதியான இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 3, 2025 தேதி ஆன நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பயணிகளே கவனிங்க.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் இதுதான்!

அதேசமயம் அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு அதாவது 2025 ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக குறையும் வெப்பநிலை:

மழை ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்து வரக்கூடிய சில தினங்களுக்கு வெப்பநிலையும் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 7ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – பிரதீப் ஜான்:


இந்த சூழலில் 2025 ஆகஸ்ட் மாதம் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு கடற்கரையோரம் உருவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆகஸ்ட் மாதங்களில் இது போன்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவது மிகவும் அரிதான ஒன்று எனவும் இந்த ஆண்டு அது நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் நல்ல மழை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.