அம்மா திட்டியதால் மன உளைச்சல்.. விஷம் குடித்து விபரீத முடிவு எடுத்த அண்ணன், தம்பி!
Brothers Killed Themselves in Thiruvallur | திருவள்ளூரில் மது குடித்துவிட்டு வந்த அண்ணன், தம்பியை தாய் திட்டிய நிலையைல் மனமுடைந்த அவர்கள் இருவரும் வுஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், குடிப்பதற்காக திட்டிய நிலையில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர், ஆகஸ்ட் 01 : திருவள்ளூரில் (Thiruvallur) மது குடிப்பதை தாய் கண்டித்த நிலையில் மனமுடைந்த அண்ணன், தம்பி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காதல் விவகாரத்தில் இளைய மகனுக்கும் தாய்க்கும் வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், மது குடிப்பதற்காக திட்டியதால் இளைஞர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். இந்த நிலையில், தாய் திட்டியதால் சகோதரர்கள் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாய் திட்டியதால் மன உளைச்சல் – சகோதரர்கள் விபரீத முடிவு
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. 49 வயதாகும் இவருக்கு 28 வயதில் விக்னேஷ் என்ற மகனும், 24 வயதில் கணேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கணேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். கணேஷின் காதல் விவகாரம் அவரது தாய்க்கு தெரிய வந்த நிலையில், ஜெயலட்சுமி அவரைக் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Tirunelveli Honour Killing: கவின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நாங்க உண்மையா காதலிச்சோம்.. சுபாஷினி வெளியிட்ட வீடியோ..




மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த சகோதரர்கள்
இந்த நிலையில் ஜூலை 30, 2027 அன்று விக்னேஷ் மற்றும் கணேஷ் இருவரும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். ஏற்கனவே காதல் விவகாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், தனது இரு மகன்களும் மது குடித்துவிட்டு சுற்றி திரிவது தாய்க்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஜெயலட்சுமி தனது இரண்டு மகன்களையும் கண்டித்துள்ளார். தாய் திட்டியதால் மனம் உடைந்த இரண்டு மகன்களும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அவர்கள் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில், அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : சிறை டூ அபராதம்.. பெண்களை மிரட்டினால் அவ்வளவு தான்… காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு!
மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத தாய்
அங்கு அண்ணன் தம்பி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூலை 31, 2025) காலை தம்பி கணேஷ் உயிரிழந்தார். மகன்கள் உயிரிழந்ததை கண்டு அவர்களது தாய் கதறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து அண்ணன் விக்னேஷும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாய் திட்டியதால் மகன்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)