நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது… விசாரணை தீவிரம்
Tirunelveli Honour Killing Case : திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக 2025 ஜூலை 30ஆம் தேதியான நேற்று அவர் கைது செய்யப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி, ஜூலை 31 : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் (Kavin Murder Case) ஆணவக் கொலை (Tirunelveli Caste Killing) செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித்தின் தந்தையும், சப் இன்ஸ்பெக்டருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த சரவணணை போலீசார் தேடி வந்த நிலையில், 2025 ஜூலை 29ஆம் தேதியான இரவில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சரவணன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கவின் திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளது. இவருக்கு பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.
நெல்லை ஆணவக் கொலை
இது அவர்களது வீட்டிற்கு தெரியவர, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணின் சகோதர் தனது அக்காவிடம் பேசக் கூடாது என பலமுறை கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, கவின் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஜூலை 27ஆம் தேதி தனது தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், கவின் மற்றும் அவரது பெற்றோர் பாளையங்ககோட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த சுர்ஜித், கவினை தனியாக அழைத்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கவினை சுர்ஜித் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
Also Read : திருநெல்வேலி கவின்குமார் ஆணவப்படுகொலை.. போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு..




இதில் நிகழ்விடத்திலேயே கவின் உயிரிழந்தார். இதனை அடுத்து, சுர்ஜித் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆணவக் கொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது
பிரேத பரிசோதனை முடிந்தும், கவினின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பு தெரிவத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிவாரணம் கூட தேவையில்லை எனவும், சுர்ஜித்தின் பெற்றோருக்கு இதில் பங்கு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர் இருவரம் காவல் உதவி ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஏற்கனவே, இவர்கள் இரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை சரவணணை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read : அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற 17 வயது சிறுவன்.. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்..
இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அடுத்த கட்டமாக, சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த சம்பவத்தில் சுர்ஜித் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த வழக்கி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.