நெல்லை ஆணவக் கொலை.. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
Tirunelveli Honour Killing Case : திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாற்று சாதி பெண்ணை காதலித்ததால், இளைஞர் கவினை பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொலை செய்துள்ளார். அவர் தற்போது சிறையில் உள்ளார். மேலும், பெண்ணின் பெற்றோர் தலைமறைவாகி இருக்கும் நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

2025 ஜூலை 30 : திருநெல்வேலி கவின் ஆவணக் கொலை (Tirunelveli Honour Killing Case) வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் தன்மை முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 2025 ஜூலை 27ஆம் தேதி இளைஞர் கவின்செல்வகணேஷ் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கியது. தூத்துக்குடி மாவட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான கவின்செல்வகணேஷ். இவர் சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், 2025 ஜூலை 27ஆம் தேதி தனது வீட்டிற்கு கவின் வந்துள்ளார்.
அப்போது, அவரது தாத்தாவுக்கு உடல்நிலை சரியவில்லை என பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, வந்த சுர்ஜித் என்ற இளைஞர், அவரை தனியாக அழைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அதாவது, திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரும் கவினும் தான் காதலித்து வந்துள்ளனர்.
Also Read : அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற 17 வயது சிறுவன்.. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்..




இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. இதனை அடுத்து, கவின்குமார் பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கவின்செல்வகணேஷை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
ஆணவக் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
அதில், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால், கவின்செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, சுர்ஜித்தை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சுர்ஜித்தின் பெற்றோர் மணிமுத்தாறு பட்டாலியன் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் கைதான சர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தோஷ் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Also Read : தலைக்கேறிய போதை.. திருட சென்ற வீட்டில் படுத்து தூங்கிய நபர்.. கையும், களவுமாக சிக்கினார்!
மேலும், கவின்செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகாரில் சட்டப்பிரிவுகள் 296(b), 49. 103(1)BNS சட்டப்பிரிவுகள் 3(1)(1), 3(1)S, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமார் ஆகியோர் முதல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.