தலைக்கேறிய போதை.. திருட சென்ற வீட்டில் படுத்து தூங்கிய நபர்.. கையும், களவுமாக சிக்கினார்!
Man Slept on Terrace When Theft Attempt Failed | திண்டுக்கலில் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் திருட சென்ற நபர் அதிக அளவு மது போதையில் இருந்த நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளார். வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது அவர் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

திண்டுக்கல், ஜுலை 29 : திண்டுக்கலில் (Dindugal) மதுபோதையில் வீட்டில் திருட சென்ற நபர், போதை தலைக்கேறியதால் வீட்டின் மொட்டை மாடியிலே படுத்து தூங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், அது குறித்து அவர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவரை கைது செய்த போலீச்சார், விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் வீட்டிற்கு திருட வந்து மதுபோதையில் தூங்கியது தெரிய வந்துள்ளது.
திருட சென்ற இடத்தில் படுத்து தூங்கிய போதை ஆசாமி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 28, 2025) கடை வீதிகளில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் போதையில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்கள் இரவு நேர வேலைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் அவர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளனர். இந்த நிலையில், பஷீர் என்பவர் இன்று (ஜுலை 29, 2025) காலை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
இதையும் படிங்க : காதல் விவகாரம்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்!




அப்போது அவர், வீட்டின் மொட்டை மாடியில் ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அது குறித்து அவர் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தூங்கிக்கொண்டு இருந்த நபரை எழுப்ப முயற்சி செய்துள்ளார். அப்போதுதான் அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
திருட முடியாத நிலையில் மொட்டை மாடியில் படுத்து தூங்கிய நபர்
அதுமட்டுமன்றி ஜவுளிக்கடை மாடியில் இருந்த கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்யும்போது அது முடியாமல் போகவே அவர் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அவர் முழு போதையில் இருந்த நிலையில், அவரால் எந்த வித பதிலும் சொல்ல முடியவில்லை.
இதையும் படிங்க : போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த நபர் பொதுமக்கள் தூங்கிய பிறகு இரவு 11 மணிக்கு மேல் திட்டமிட்டு திருட வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், திருடாமல் அங்கேயே தூங்கியுள்ளார். அதுமட்டுமன்றி அவருடன் திருட வந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மாடியில் தூங்கிக்கொண்டு இருந்த நபரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.