காதல் விவகாரம்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்!
Palayankottai Engineer Murder | திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அக்காவின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்த தம்பி, இளைஞரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த இளைஞரை கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாளையங்கோட்டை, ஜூலை 28 : திருநெல்வேலியில் என்ஜினியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் மாற்று சமூகத்தை சேர்தவர் என்பதால், அவர் தனது அக்காவுடன் பேசுவது பிடிக்காமல் 24 வயது இளைஞர் இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குற்றவாளியை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், என்ஜினியர் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதலுக்கு எதிர்ப்பு – வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியை சேர்தவர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி தம்பதியினர். இவர்கள் இருவரும் காலவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், 26 வயது மகளும் இருக்கின்றனர். சரவணன் தூத்துக்குடியில் வசித்து வந்த போது அவரது மகளுக்கும், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமார் என்ற 26 வயது இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!




அதனை தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளன்னர். கவின் குமார் சென்னையில் என்ஜினியராக பணியாற்றி வந்த நிலையில், அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, சரவணின் மகளுடன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். அவ்வாறு தனது காதலியை பார்ப்பதற்காக கவின்குமார் ஏரலில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் சரவணன் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. கவின் குமார் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்து சரமாரியாக வெட்டிக் கொன்ற காதலியின் தம்பி
இதற்கிடையே கவின் குமாரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், அவரை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் கவின் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சரவணனின் மகன் சுர்ஜித், கவின் குமாரிடம் பேசுவதற்காக அவரை அழைத்துள்ளார். அழைப்பின் பேரில் வந்த கவின் குமாரிடம் சுர்ஜித் தனது அக்காவுடனான காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!
அதற்கு கவின்குமார் மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின் குமாரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவின் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.