Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தை.. கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்!

Coimbatore Mother Kills Child | கோயம்புத்தூரில் திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்ததால் பெண் ஒருவர் தனது 4.5 வயது குழந்தைதை கொலை செய்துள்ளார். ஆரம்பத்தில் இந்த விவகாரம் குறித்து அந்த பெண் நாடகமாடிய நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தை.. கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jul 2025 08:18 AM

கோயம்புத்தூர், ஜூலை 27 : கோயம்புத்தூரில் (Coimbatore) திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததால் அடித்ததாக அந்த பெண் நாடகமாடியுள்ளார். ஆனால், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திருமணத்தை மீறிய உறவுக்காக 4.5 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தை – தாய் செய்த கொடூரம்

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி என்ற பெண். இவருக்கு திருமணம் ஆகி நான்கரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து அவர் தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தமிழரசி அந்த பகுதியில் கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவருடன் கட்டட வேலை செய்யும் வசந்த் என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையே இருந்த உறவு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இதையும் படிங்க : Tiruvallur Minor Girl Case: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளியான குற்றவாளியின் பெயர்..!

திடீரென உயிரிழந்த குழந்தை – அதிர்ச்சி பின்னணி

இந்த நிலையில் தமிழரசியின் நான்கரை வயது பெண் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தமிழரசி இடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அடித்ததாக தமிழரசி கூறியுள்ளார். இருப்பினும் தமிழரசி மீது சந்தேகம் தீராத காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இந்த சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!

திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்

அதாவது திருமணத்தை மீறிய உறவுக்கு தனது நான்கரை வயது பெண் குழந்தை தடையாக இருந்த நிலையில் தமிழரசி அவரை கழுத்தை நெறித்து மிக கொடூரமாக கொலை செய்துள்ளார். சிறுமியின் பிரேத பரிசோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழரசி மற்றும் அவரது காதலரை கைது செய்த போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.