Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகன் உயிரிழந்ததால் மன உளைச்சல்.. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி!

Parents Killed Themselves | ஈரோட்டில் தனது மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த பெற்றோர் தங்களது உறவினர்களுக்கு வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட்டின் அடிப்படையில் உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

மகன் உயிரிழந்ததால் மன உளைச்சல்.. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி!
தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jul 2025 11:12 AM

ஈரோடு, ஜூலை : ஈரோட்டில் மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த பெற்றோர் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த அவர்கள் இனி நாங்கள் உயிருடன் இருந்து என்ன செய்ய போகிறோம் என கூறி வந்துள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். இந்த நிலையில், மகன் இறந்த சோகத்தில் பெற்றோர் விபரீத முடிவு எடுத்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகன் உயிரிழந்த சோகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட பெற்றோர்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமி ஊர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி தீபா. இந்த தம்பதி விவசாயம் செய்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் விசைத்தறி பட்டறை ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 22 வயது பிரதீப் கொஞ்சம் பக்கடி இருந்த நிலையில் அவர் கோவையில் உள்ள கல்லூரியில் தங்கிப் படித்து வந்துள்ளார். எதிர் நிலையில் ஜூலை 16, 2025 அன்று விடுமுறைக்கு ஊருக்கு வந்த நிலையில், தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றுள்ளார்.

அங்கு மழையால் ஒழுகும் கூரையை சரி செய்ய சிமெண்ட் ஓட்டின் மீது ஏறி உள்ளார். அப்போது ஓடு உடைந்து கீழே விழுந்து அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் ஜூலை 18, 2025 அன்று அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது… விசாரணை தீவிரம்

நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம் – பெற்றோர்கள் உருக்கம்

மகன் இறப்பை தாங்க முடியாமல் தீபாவும், அவரது கணவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இனி தாங்கள் உயிரோடு இருந்து என்ன செய்ய போகிறோம் என்று அவர்கள் அடிக்கடி தங்களது உறவினர்களிடம் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு தற்கொலை செய்துக்கொள்ள போவதாக தங்களது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளனர்.

அதில், பிரதீப் குட்டியின் பிரிவை எங்களால் மறக்க முடியாது. நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம். எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று அவர்கள் அதில் கூறியுள்ளனர். இந்த வாய்ஸ் நோட்டை கேட்டு அதிட்ச்சியடைந்த அவர்களது உறவினர்கள் விரைந்து சென்ற நிலையில், அங்கு தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், பிணமாக கிடந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)