கணவனின் சந்தேகத்தால் மனமுடைந்த பெண்.. திருமணமான இரண்டே மாதங்களில் விபரீத முடிவு!
Newly Married Young Woman Killed Herself | காரைக்காலை சேர்ந்த ஹேமா என்ற 28 வயது இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், தனது கணவன் தன்னை சந்தேகப்படுவதால் மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

காரைக்கால், ஆகஸ்ட் 05 : காரைக்காலில் (Karaikkal) தன் மீது கணவன் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் அவரை துன்புறுத்திய நிலையில், பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். திருமணமான இரண்டே மாதங்களில் கணவனின் சந்தேகத்தால் மணைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மீது சந்தேகம் – துன்புறுத்திய கணவன்
காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 28 வயதில் ஹேமா என்ற மகள் இருந்த நிலையில், கும்பகோணம் அருப்புக்கோட்டையை சேர்ந்த செல்வ முத்துக்குமரன் என்ற நபருக்கு ஹேமாவை அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். செல்லமுத்து குமரன் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக திருமணம் முடிந்த கையோடு ஹேமா பெங்களூரு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : விசாரணைக்கு சென்ற பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த போலீஸ்.. பகீர் சம்பவம்!




வீட்டில் அனைவரும் தூங்கிய நேரம் பார்த்து விபரீத முடிவு எடுத்த ஹேமா
இந்த நிலையில் ஹேமா மீது சந்தேகப்பட்ட முத்துக்குமரன் தான் வேலைக்கு செல்லும் போது அவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். அது மட்டுமின்றி ஹேமாவின் செல்போனை வாங்கி அவர் உடைத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஹேமா, இவற்றை குறித்து தனது தாய் குமாரிடம் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஹேமாவின் தாய் முத்துக்குமரனின் தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து பெங்களூரு சென்ற அவர் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்த நிலையில் ஆடி மாதத்திற்காக ஹேமாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த ஹேமா வீட்டில் அனைவரும் தூங்கிய நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : தண்ணீர் வாளியில் விழுந்த 1 வயது குழந்தை.. மூச்சுத்திணறி பலியான சோகம்!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
ஹேமா தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். பின்னார் ஹேமாவின் தாய் குமாரி அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.