ரீல்ஸ் மோகம்.. பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி.. சென்னையில் ஷாக்!
Chennai Crime News : சென்னை அடுத்த பல்லாவரத்தில் பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ரீல்ஸ் எடுப்பதற்காக தனது நண்பருடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 19 : சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் அதிவேகமாக சென்றபோது, நேருக்கு நேர் பைக் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் காயம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். ஆபத்தான முறையில் இளைஞர்கள் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். பைக்கில் வேகமாக செல்வது, ரயில் மீது ஏறி நடனம், நடுரோட்ல் நடனம் போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுபோன்றவை தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை பல்லவாரத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் வேகமாக சென்ற பள்ளி மாணவர் உயிரிழந்தார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அகமது (17). இவர் அதே பகுதியில் பள்ளியில் படித்து வந்தார். மேலும், ஏசி மெக்கானிக் வேலையும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று பைக்கை ஒட்டிக் கொண்டு, இவரது நண்பரான 15 வயது சுஹேல் அகமது என்பவரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தவாறு பல்லாவரம் சந்தை சாலையில் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தார்.
Also Read : மகள் காதல் திருமணம்.. மாப்பிள்ளை கார் ஏற்றி கொலை.. மதுரையில் பகீர் சம்பவம்!
பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி
அப்போது, எதிர் திசையில் பைக்கில் மூன்று வந்தனர். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 17 வயதான சுஹேல் அகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை அதிவேகமாக சிறுவன் ஓட்டி பைக் நேருக் நேர் மோதி விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்.. லேப்டாப்பை பார்த்து மனமுடைந்த மனைவி.. விபரீத முடிவு!
படுகாயம் அடைந்தவர்கள் மேற்கு வங்கம் பகுதியைச் சேர்ந்த அங்கீத் ராஜன் (22), முகர்ஜி (23), டெல்லியைச் சேர்ந்த சர்மா (23) என தெரியவந்துள்ளது. இவர்கள் தனியார் ஹோட்டலில் செஃபாக பணிபுரிந்துவிட்டு, வீட்டிற்கு திரும்பும் போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.