பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்.. லேப்டாப்பை பார்த்து மனமுடைந்த மனைவி.. விபரீத முடிவு!
Young Woman Killed Herself in Chennai | சென்னையில் தனது கணவன் திருமணத்திற்கு பிறகும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த இளம் மருத்துவர் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 17 : ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜோதீஸ்வரி. 30 வயதாகும் இவர் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த யோதீஸ்வரன் என்பவருக்கும் 2024, நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் மட்டுமே கணவன் – மனைவி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். யோதீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு சென்று வீட்டில் இருந்து வேலை செய்து வந்த நிலையில், அவ்வப்போது சென்னைக்கு வந்து மனைவியை பார்த்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
12வது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்த ஜோதீஸ்வரி
இந்த நிலையில், சென்னையில் தனியாக வசித்து வந்த ஜோதீஸ்வரி ஆகஸ்ட் 15, 2025 அன்று பெருங்களத்தூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் புறப்படுவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த அவர், கீழே செல்லாமல் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு தனது செருப்பு மற்றும் கைப்பையை கழற்றி வைத்துவிட்டு 12வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை.. ரயிலில் இருந்து இறக்கிவிட்ட நபர்.. சென்னையில் அதிர்ச்சி!




போலீசார் கூறிய பகீர் தகவல்கள்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜோதீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய போலீசார், ஜோதீஸ்வரி தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : ஒடிசாவை சேர்ந்த பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டுகள்..
அதுமட்டுமன்றி, டேட்டிங் செயலி மூலமாக 30 பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணத்திற்கு பிறகும் அதனை தொடர்ந்து வந்துள்ளார். ஜோதீஸ்வரி கணவனின் லேப்டாப்பை பரிசோதனை செய்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிய வந்து மனம் உடைந்துள்ளார். இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் தாயுடன் அரை எடுத்து தங்கி இருந்த ஜோதீஸ்வரி, தனது அக்கா வீட்டிற்கு சென்றபோது இந்த சோக முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.