மது வாங்கி தர மாட்டியா? காவலாளியை அடித்தே கொன்ற இளைஞர்கள்.. சென்னையில் பயங்கரம்!
Chennai Murder : சென்னை புதுப்பேட்டையில் காவலாளி அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மது வாங்கி கொடுக்காததால், ஆத்திரத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் சேர்ந்து காவலாளியை அடித்தே கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 16 : சென்னையில் மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரத்தில் காவலாளியை இளைஞர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு வயது 68. இவர் ஆவடி கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் காவலாளியாகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு ஆவடி பகுதியில் உள்ள பார் ஒன்றில் கோபால் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அதே பாரில் ஆவடி அடுத்த கொல்லுமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (26) மற்றும் விஜயகுமார் (28) இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் இரண்டு பேரும் கோபாலிடம் பணம் இருப்பதை பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து, கோபாலிடம் இளைஞர்கள் பேச்சு வார்த்தை கொடுத்து, அவரை புதுப்பேட்டைக்கு அழைத்து சென்று மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி இருப்பதாக தெரிகிறது. அப்போது, சீனு மற்றும் விஜயகுமார் மது வாங்கி தரும்படி கேட்டிருக்கின்றனர். இதற்கு கோபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கோபால் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கோபாலை, இரண்டு பேரும் சேர்ந்து கொடூரமாக தாக்கி இருக்கின்றனர். இதில் கோபாலின் கை, கால்கள், மூக்கு போன்றவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, ரத்தமும் வடிந்தது.
Also Read : மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. பகீர் காரணம்.. சென்னையில் சம்பவம்!




இதனால் கோபால் மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து, கோபாலை இருவரும் சாலையோரத்தில் வீசியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் உடனே, சம்பவ இடத்திற்கு வந்து கோபாலின் உடலை மீட்டுள்ளனர். பின்னர், ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தததில், கோபால் போலீசார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவலலாளியை கொலை செய்த விஜய், திணேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது வாங்கி தராததால் ஆத்திரத்தில், காவலாலளி இளைஞர்கள் அடித்தே கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்.. போலீஸ் ரெய்டில் கையும், களவுமாக சிக்கியது எப்படி?
தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். அண்மைக் காலங்களில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட, நெல்லையில் நடந்த கொலை சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில், ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்து.