Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்.. போலீஸ் ரெய்டில் கையும், களவுமாக சிக்கியது எப்படி?

Man Arrested for Growing Weed Plant in House | தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டில் கஞ்சா வளர்த்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்.. போலீஸ் ரெய்டில் கையும், களவுமாக சிக்கியது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Aug 2025 08:55 AM

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 15 : கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக இளைஞர் நடந்துக்கொண்ட நிலையில், அவரை கைது செய்து அதிரடி சோதனை நடத்திய போலீசார் அவர் வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரோந்து பணியின் போது கையும், களவுமாக சிக்கிய இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் இந்துசூடன் தலைமையிலான போலீசார் நேற்று (ஆகஸ்ட் 14, 2025) ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். பின்னர் அவரை சோதனை செய்த போது அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : தொழிலாளி மூக்கை கடித்த ராட்வீலர் நாய்.. பூந்தமல்லி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..

சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் சோதனை நடத்திய போலீசார்

இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த ரவீந்திரனின் மகன் சுபாஷ் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. 27 வயதாகும் அந்த நபர் பெயிண்டராக பணியாற்றி வரும் நிலையில், இவ்வாறு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க : கோவை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. ரூ.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. சிக்கிய 2 பேர்!

மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்

இந்த விவகாரம் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிப்பதற்காக கைது செய்யப்பட்ட அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு இளைஞர் தனது மாடியில் ஏராளமான செடிகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றை சோதனை செய்யும்போது தான் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது அந்த இளைஞர் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இதனை அடுத்து கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.