வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவர்.. பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ!
Villupuram School Student Dies : விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த வந்த 11ஆம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சிறப்பு வகுப்புக்காக காலை 7 மணிக்கு பள்ளிக்கு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம், ஆகஸ்ட் 13 : விழுப்புரம் மாவட்த்தில் வகுப்பறையில் 11ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு வகுப்புக்கு காலை வந்த மாணவர், திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விழுப்புரம் விராட்டிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17) 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மோகனுக்கு தினமும் காலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தினமும் காலை 7 மணிக்கு பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்று வழக்கம்போல் மாணவர் மோகன்ராஜ் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது, வகுப்பறைக்குள் நுழைந்த மோகன்ராஜ் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனே சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மோகன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மோகன் ராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த மாணவருக்கு மூச்சு திணறல் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால், உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். இதனை அடுத்து, உடனே அங்கிருந்து மருத்துவமனைக்கு மாணவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.




Also Read : 23 வயது இளைஞரை கொலை செய்த 16 வயது வடமாநில சிறுமி.. பகீர் சம்பவம்!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவர் பலி
Student Dies After Collapsing at Private School in #Villupuram
Mohanraj (17), a Class XI student, collapsed and died on Wednesday morning at a private school on TVK Street. Following his death, the school has been declared a holiday for the day.@NewIndianXpress@xpresstn pic.twitter.com/C45n8oiV8c— Bagalavan Perier B (@Bagalavan_TNIE) August 13, 2025
இது தொடர்பாக விழுப்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் மாணவர் மயங்கி விழுந்தது பதிவாகி உள்ளது. தற்போது, அந்த வீடியோ சமுக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.
Also Read : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு
அந்த வீடியோவில், மோகன்ராஜ் வகுப்பறைக்குள் வந்து மேசையில் அமர்ந்துள்ளார். திடீரென அவர் வகுப்பறையில் அமர்ந்தப்படியே மயங்கி விழுந்தளளார். இதனை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள் சூழ்ந்தது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் எந்த காரணத்திற்காக உயிரிழந்தார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
முழு விசாரணைக்கு பிறகே, மாணவர் உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும். இதற்கிடையில், மாணவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.