Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘வேலை நிறுத்தத்தை கைவிடுக.. பணி பாதுகாப்பு 100% உறுதி’ – சென்னை மாநகராட்சி

Chennai Sanitation Workers Protest : சென்னையில் தூய்மை பணியாளர்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணிபாதுகாப்பு 100 சதவீதம் உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வேலை நிறுத்தத்தை கைவிடுக.. பணி பாதுகாப்பு 100% உறுதி’ – சென்னை மாநகராட்சி
சென்னை தூய்மை பணியாளர்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Aug 2025 10:46 AM

சென்னை, ஆகஸ்ட் 12 :   சென்னை மாநகராட்சியில் (Chennai Coporation) பணியாற்றும் தற்கொலிக தூய்மை பணியாளர்களின் (Sanitation Workers Protest) பணிப் பாதுகாப்பு, பணப்பலன்களை உறுதி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், உண்மை நிலைமையை புரிந்து கொண்டு, மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தூய்மை பணியாளர்கள் 10 நாட்களாக போராட்டத்தில்  ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை  மாநகராட்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மை பணியாளர்களை ரூ.276 கோடிக்கு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி, 2025 ஜூலை 16ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்காக வேலைக்கு செல்லாமல், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெயில் என பாராமல், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தவெக, தேமுதிக, நாதக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் தான், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வேலைக்கு செல்ல வலியுறுத்தியுள்ளது.

Also Read : தொடர் விடுமுறை… ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

‘வேலை நிறுத்தத்தை கைவிடுக’


இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறுகையில், “தற்போது மண்டலம் 5 மற்றும் 6ல் தூய்மை பணிகள் ராம்கி நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒப்பந்தத்தின்படி, 3809 தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் தற்போது வரை 1,770 பணியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் இந்தப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளது.

Also Read : தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சுய உதவிக் குழுவின் மூலமாக பணிகளை செய்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என தெரிவித்துள்ளது.