Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெரு நாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு.. இனி பிரச்னை இருக்காது!

Rabies Vaccination : சென்னை மாநகராட்சியில் உள்ள 1.5 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமாக நாளொன்றுக்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போடவும், தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு மை வைக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 80 சதவீதம் தெருநாய்களுக்கு அடுத்த 60 நாட்களுக்குள் ரேபிஸ் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு தடுப்பூசி..  சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு.. இனி பிரச்னை இருக்காது!
நாய்களுக்கு தடுப்பூசி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Aug 2025 07:13 AM

சென்னை, ஆகஸ்ட் 08 : தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி  (Rabies Vaccination) போடும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி ( Greater Chennai Corporation) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாய்களுக்கு தெருகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. தெரு நாய்களால் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தெரு நாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த பிரச்னையை கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையின் நாய்க்கடி சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

2025 ஆம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 1.24 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர். இப்படியாக மாநிலம் முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது தெருநாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளதாக தெரிகிறது. இத்திட்டம் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. எப்போது தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  கால்நடை மருத்துவ குழுக்கள் நேரடியாக திருக்கலுக்கே சென்று நாய்களுக்கு ரேவிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.

இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 3000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளுக்கு மை வைக்கப்படும். இந்தத் திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், மண்டல வாரியாக  முகாம்கள் அமைத்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.

சமீபத்தில் தான் மதுரையில் மண்டல வாரியாக தெருக்களுக்கே சென்று ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், கால்நடை மருத்துவர்கள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதனால்,  நாய்க்கடிகளில்  ரேபிஸ் நோயால் மக்கள் பாதிக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 

இது மட்டுமில்லாமல், சென்னை மாநகராட்சி தெரு நாய்களின் இனப்பெருக்கை கட்டுப்படுத்தத கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கூறுகையில், “சென்னையில் நாய் கடி சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பில் 1.8 லட்சத்துக்கு மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாக தெரிந்தது.

Also Read : 7வது நாளாக போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. சாலைகளில் நிரம்பி வழியும் குப்பைகள்.. என்ன காரணம்?

இதுவரை ஏபிசி மையங்களில் பதிவு  செய்யப்பட்ட நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரேபிஸ் தடுப்பூசியால் நாய்கள் மூலம் பரவும் பெருந்தொற்றுகள் பரவுவதை தடுக்க முடியும்.  மேலும், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது மக்களை பாதிக்காமல் இருக்க உதவும்” என தெரிவித்தார்.