Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. எப்போது தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Mudhalvarin Thayumanavar Thittam : முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயதாவர்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தால் 21.70 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. எப்போது தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வரின் தாயுமானவர் திட்டம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 21:11 PM

சென்னை, ஆகஸ்ட் 07 : தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் ’முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தால் 21 லட்சத்து 76 ஆயிரத்து 454 பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகள் மூலம் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2.5 கோடி குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த பொருட்களை மாதந்தோறும் நியாய விலை கடைகளுக்கு சென்று மக்கள் கைரேகை பதிவு செய்து வாங்கி வருகின்றனர் இதற்காக மக்கள் வரிசையில் நின்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் முதியவர்களுக்கு வரிசையில் நின்று வாங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு நபர்களை அனுப்பிய ரேஷன் பொருட்களை வாங்கும் சூழல் அவர்களுக்கு நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்ட தமிழக அரசு இதற்காக புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.

Also Read : சிவகங்கையில் வினோதம்.. ஒருவர் மட்டுமே வாழும் நாட்டாகுடி கிராமம்.. என்ன பிரச்னை?

தாயுமானவர் திட்டம்


அதாவது, முதியவர்கள், மாற்றத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவருடைய வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யும் வகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை திட்டம் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Also Read : 45 நாட்களில் நடவடிக்கை.. மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்!

இத்திட்டத்தின் மூலம் 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், 91,969 குடும்ப அட்டையில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது எனவே மொத்தமாக 21,27,797 பயனாளர்களுக்கு இல்லங்களிலே ரேஷன் பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை தகுதி உள்ள பயனாளிகளுக்கு நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது