Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகங்கையில் வினோதம்.. ஒருவர் மட்டுமே வாழும் நாட்டாகுடி கிராமம்.. என்ன பிரச்னை?

Sivaganga Nattakudi Village : சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிய நிலையில், முதியவர் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். அடிப்படை வசதிகள், தொடர் கொலைகள் ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் நாட்டாகுடி கிராமத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்.

சிவகங்கையில் வினோதம்.. ஒருவர் மட்டுமே வாழும் நாட்டாகுடி கிராமம்.. என்ன பிரச்னை?
நாட்டாகுடி கிராமம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 20:23 PM

சிவங்கை, ஆகஸ்ட் 07 : சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி (Nattakudi Village) என்ற கிராமத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்.  இந்த கிராமத்தில் இருந்து அனைத்து மக்களும் காலி செய்த நிலையில், முதியவர் ஒருவரை மட்டுமே வாழ்ந்து வருகிறார்.  இந்த கிராமத்தில் வசித்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் காலி செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, அந்த கிராமத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.  தென்பகுதியில் முக்கிய மாவட்டமாக சிவகங்கை விளங்குகிறது. தென் மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதியின் மேம்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் என் பகுதியில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது அடிப்படை வசதி இல்லை எனக் கூறி சிவகங்கை மாவட்டம் நாட்டார் கிராமத்தில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலி செய்துள்ளனர். இதனால், கிராமத்தில் வெறும் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் நம் நாட்டா குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஒருவர் மட்டுமே வாழும் நாட்டாகுடி கிராமம்


அந்த கிராமத்தில் கடும் பஞ்சம் நிலவி வந்தது. அதாவது போதுமான அளவுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுகாதார சேவைகள் என எதுவும் இன்றி மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது . சுகாதார வசதிகள் எதுவும் இல்லாததால் தொற்று நோய் பரவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிராமத்தில் உள்ள மக்களுக்கு உடல்நல குறைவு, நோய் தொற்று, வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு என பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கிராமத்தில் இருந்து குடிநீருக்காக மற்றொரு கிராமத்திற்கு செல்லும் நிலையும் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. 

Also Read : வைரலான வீடியோ.. பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்..  சிக்கலில் கோபி, சுதாகர்

என்ன பிரச்னை?

அதோடு இல்லாமல் இளைஞர்களுக்கு போதுமான அளவு கல்வி, வேலைவாய்ப்பும் கிடைக்காத சூழல் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். இப்படியாக தொடர்ந்து சிரமத்தை எதிர்கொண்டு  வந்த நாட்டாகுடி மக்கள், அந்த கிராமத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்து உள்ளனர். நாட்டாகுடி கிராமத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிவகங்கை மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Also Read : 50% தள்ளுபடி.. இனி ஊபர் செயலியில் மெட்ரோ டிக்கெட்.. ஈஸியா புக் பண்ணலாம்!

இதனால் நாட்டா குடி கிராமத்தில் ஒரே ஒரு முதியவர் மட்டுமே வசித்து வருகிறார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னாள் பாஜக மாநில தலைவரும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், நாட்டாகுடி அருகே படமாத்தூர் கிராமத்தில் ஒரு காவல் நிலையத்தை அமைக்க மாவட்ட ஆட்சியர் பொற்கொடி பரிந்துரைத்துள்ளார்.