Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

50% தள்ளுபடி.. இனி ஊபர் செயலியில் மெட்ரோ டிக்கெட்.. ஈஸியா புக் பண்ணலாம்!

Chennai Metro Train Tickets On Uber App : சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை இனி ஊபர் செயலியில் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம், ஊபர் செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, நிகழ்நேர போக்குவரத்துத் தகவல்களை பெறவும் முடியும். மெட்ரோ ரயில் டிக்கெட்டில் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 50 சதவீத அறிமுக தள்ளுடிபடியை ஊபர் நிறுவனம் வழங்கி உள்ளது.

50% தள்ளுபடி.. இனி ஊபர் செயலியில் மெட்ரோ டிக்கெட்.. ஈஸியா புக் பண்ணலாம்!
சென்னை மெட்ரோ ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 14:59 PM

சென்னை, ஆகஸ்ட் 07 : சென்னை மெட்ரோ பயணிகள் (Chennai Metro Rail Ticket), இனி ஊபர் செயலியில் (Uber App) மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. குறிப்பாக, சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளுக்கு 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 50 சதவீத அறிமுக தள்ளுபடியை ஊபர் நிறுவனம் வழங்குகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. சென்னை மெட்ரோ ரயில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், மாணவர்கள் மாணவர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெ ட்ரோ ரயில் ஈர்க்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடந்து வருகிறது.

அதே நேரத்தில், பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. குறிப்பாக டிக்கெட் எடுக்கும் முறையில் பயணிகள் வந்து சதிக்கு ஏற்ப பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் மெட்ரோ பயன்களுக்கு ஏற்ப சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 50% அறிமுக தள்ளுபடி வழங்குகிறது உபர் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தையும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் நிமிடேட் உடன் இணைந்து ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் நிறுவனமானது அதன் உபர் செயலி மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட் பெறுவதை அறிமுகப்படுத்துவதாக உபர் அறிவித்துள்ளது

Also Read : ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..

இனி ஊபர் செயலியில் மெட்ரோ டிக்கெட்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உடன் இணைந்து ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் நிறுவனமானது, அதன் ஊபர் செயலியின் மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டுகளை பெறுவதை அறிமுகப்படுத்துவதாக ஊபர் அறிவித்துள்ளது. எனவே, 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று முதல் பயணிகள் ஊபர் செயலியில் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

மேலும், QR- அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்க முடியும். அதோடு, நிகழ்நேர போக்குவரத்துத் தகவல்களை பெற முடியும். மேலும், சென்னையில் உள்ள பயணிகள் 2025 ஆகஸ்ட் மாதம் முழுவதும் மெட்ரோ டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும்.

Also Read : கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை

சென்னையில் உள்ள மெட்ரோ நிலையங்களில் தொடங்கும் அல்லது முடிக்கும் சவாரிகளுக்கு ஊபர் ஆட்டோ மற்றும் ஊபர் பைக் டாக்ஸிக்கு ரூ.20 வரை 50% தள்ளுபடியை ஊபர் வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் முழுவதும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.