Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை

Coimbatore Police Station : கோவை மாவட்டத்தில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நபர், காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு கோரி புகார் அளித்த சில மணி நேரங்களில் அவர் காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. தற்கொலை செய்து கொண்டவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் என போலீசார் கூறியுள்ளனர்.

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை
கோவை காவல் நிலையம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Aug 2025 12:33 PM

கோவை, ஆகஸ்ட் 06 : கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கியது. மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமாரை, விசாரணைக்காக அழைத்துச் சென்ற திருபுவனம் போலீசார் அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி நடத்தி வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டம் பெரிய கடை வீதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த காவல் நிலையத்திற்கு 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு புகார் அளிக்க வந்ததாக கூறப்படும் ஒருவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது ‌. உதவி ஆய்வாளர் அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட நம்பர் ராஜன் (60) என்பது தெரியவந்துள்ளது. இவர் பேரூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கோவை கடைவீதி காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11 மணியளவில் காவல் நிலையத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி புகார் அளித்துள்ளதாக தெரிகிறது

Also Read : 12 ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்.. அக்கவுடன் பேசுவதை நிறுத்தாததால் வெறிச்செயல்!

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு

அதன்பிறகு, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறதுஇது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் ஆணையர் சரவண சுந்தர், “பெரியகடை காவல் நிலையத்தில் ராஜன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்டவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். சம்பவத்தின்போது, காவல் நிலையத்தில் பணியில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எதற்காக ராஜன் காவல் நிலையத்திற்குள் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்து வருகிறோம்என்று கூறினார். கோவை காவல்நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Also Read : நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)