Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருப்பூரில் பயங்கரம்.. விசாரணைக்கு சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை.. நடந்தது என்ன?

Tirupur Murder : திருப்பூர் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் பயங்கரம்.. விசாரணைக்கு சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை.. நடந்தது என்ன?
கொலை செய்யப்பட்ட போலீஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Aug 2025 08:21 AM

திருப்பூர், ஆகஸ்ட் 06 :  திருப்பூர் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை (Tirupur  SI Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு சென்ற இடத்தில், காவல் உதவி ஆய்வாளரை இரண்டு பேர் தலை துண்டித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தமிழகத்தில் சமீப நாட்களாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட நெல்லையில் கவின்குமார் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இப்படியான சூழலில் திருப்பூரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

அதாவது விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை இரண்டு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு வயது 52. இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு நேற்று இரவு தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சண்முகவேல் குடிமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு விரைந்துள்ளார்.

Also Read : அதிகரிக்கும் சைபர் கிரைம்.. ஜூலையில் மட்டும் ரூ. 1.65 கோடி மீட்பு – சென்னை காவல் துறை தகவல்..

விசாரணைக்கு சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை

அங்கு தந்தை மகனுக்கு இடையே பிரச்சனை நடந்துள்ளது. அந்தத் தோட்டத்தில் மகன் தங்கபாண்டியன், தந்தை மூர்த்தி ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர். இருவருக்கும் மது போதையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அங்கு தந்தை, மகனை அரிவாளுடன் வெட்ட முயன்றதாக தெரிகிறது. இதனை அறிந்து தனது ஓட்டுநருடன் வந்த சண்முகவேல் இருவருக்கும் இடையே ஆன பிரச்சனையை முடித்து வைக்க முயன்றார்.

அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் சண்முகவேலை கொடூரமாக கொலை செய்துள்ளார். அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் அவருடன் வந்த ஓட்டுநரையும் வெட்ட முயன்றுள்ளார். உடனே அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு  சென்ற ஓட்டுனர், இதுபற்றி தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சண்முகவேலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read : நெல்லை கவின் ஆணவப்படுக்கொலை.. சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை..

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணைக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரை இரண்டு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.