நெல்லை கவின் ஆணவப்படுக்கொலை.. சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை..
Nellai Crime News: நெல்லையில் கவின் செவகணேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக காதலி சுபாஷினியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கவினின் தந்தைக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மென்பொருள் ஊழியர் கவின் செல்வகணேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் இவருக்கு வயது 27 ஆகும். இவர் சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவரும் திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகரை சேர்ந்த சுபாஷினியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வர கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான பின்னணி என்ன?
சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கவின் இடம் பல முறை தனது அக்காளிடம் பேசக்கூடாது என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அதனை கவின் கேட்கவில்லை தொடர்ந்து சுபாஷினி இடம் கவின் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 27 2025 தேதி அன்று பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு தனது தாத்தாவை அழைத்து வந்த கவிணை சுர்ஜித் தனியாக பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பித்து ஓடியுள்ளார்.
மேலும் படிக்க: தண்ணீர் வாளியில் விழுந்த 1 வயது குழந்தை.. மூச்சுத்திணறி பலியான சோகம்!
இந்த கொலை சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது அதாவது கவின் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு சுபாஷினியின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆணவ படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சுர்ஜித்தை காவல்துறையினர் கைது செய்து அவருக்கு 14 நாட்கள் காவல் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி அதாவது சுபாஷினியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு:
சுர்ஜித்தைத் தொடர்ந்து அவரின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் சுஜித் தாயான கிருஷ்ணகுமாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. 25 சவரன் நகையை பறிகொடுத்த பெண்..
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 1 2025 தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் கவனின் காதலியான சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல் ஆகஸ்ட் 2 2025 தேதியான நேற்றும் சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தந்தை சரத்குமாருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:
இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கவிதை அங்கு யார் வரவழைத்தது? யார் அழைத்துச் சென்றது சுர்ஜித் உடன் சம்பவம் நடந்த இடத்தில் யார் உடன் இருந்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இதற்கு முன்னதாக சிபிசிஐடி அதிகாரிகள் கவின் குமார் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க கவின் தந்தை சரத்குமார் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்காக காவல்துறை தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.