Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லை ஆணவக் கொலை.. கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த எம்பி கனிமொழி, அமைச்சர்கள்!

Tirunelveli Honour Killing : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் சகோதரர், தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கவினின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி, அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

நெல்லை ஆணவக் கொலை.. கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த எம்பி கனிமொழி, அமைச்சர்கள்!
கவின் குடும்பத்தினரை சந்தித்த எம்.பி, அமைச்சர்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 Jul 2025 09:52 AM

நெல்லை, ஜூலை 31 : திருநெல்வேலியில் ஆணவக் கொலை (Tirunelveli Honour Killing Case) செய்யப்பட்ட கவினின் (Kavin Murder) குடும்பத்தினரை எம்.பி (Kanimozhi MP) கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு, குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.  2025 ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின் குமார் படுகொலை செய்யப்பட்டார். தனது அக்காவை காதலித்ததால், அவரது சகோதர் சுர்ஜித், கவினை கொலை செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்களது காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால், கவினை பலமுறை பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருப்பினும், அந்த பெண்ணிடம் கவின் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று கவின் தனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

Also Read : நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை கைது… விசாரணை தீவிரம்

தனது தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு வந்த சுர்ஜித், கவினை அழைத்து பேசியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கவின் கொலை செய்யப்பட்டார். இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.

கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கனிமொழி, அமைச்சர்கள்

இது தொடர்பாக பெண்ணின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும், சப் இன்ஸ்பெக்டருமான சரவணன் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கவின்னி உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தங்களுக்கு நிவாரணம் வேண்டாம் எனவும், நீதி வேண்டும் எனவும்  கூறியுள்ளனர். மேலும், ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், கவின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா சீவன், கே.என் நேரு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Also Read : நெல்லை ஆணவக் கொலை.. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

இதன்பின்பு, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, “ஆணவக் கொலைகள் நடந்திருக்க கூடாது. நடக்கக் கூடாது. இதுதான் இந்த சமூகத்தின் உணர்வாக இருக்கிறது. கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை நாங்கள் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். மகனை இழந்த பெற்றோருக்காக நாங்கள் நிற்கிறோம். குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். விரைவில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும்” என கூறினார்.