Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனித்து போட்டியிடும் விஜய்க்கு வாழ்த்துக்கள் – திமுக எம்.பி கனிமொழி..

DMK MP Kanimozhi: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும் என ஜூலை 4, 2025 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு தமுக எம்.பி கனிமொழி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனித்து போட்டியிடும் விஜய்க்கு வாழ்த்துக்கள் – திமுக எம்.பி கனிமொழி..
விஜய் - கனிமொழி
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jul 2025 07:19 AM

2026 சட்டமன்ற தேர்தல்: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு சவாலாக இருக்காது என்றும் ஒருவேளை அதிமுகவிற்கு சவாலாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் ஜூலை 4 2025 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் செயற்குழு கூட்டமானது நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிலும் மிக முக்கியமாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 4 முனைப்போட்டி:

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிற கட்சிகள் திமுகவுடன் கூட்டணியிலும், அதிமுகவுடன் கூட்டணிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தமிழக வெற்றி கழகம் பாஜகவுடன் இணையலாம். அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என பல்வேறு யூகங்கள் வெளியானது.

ஆனால் ஜூலை 4 2025ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் அதனை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய தலைவர் விஜய் அதிமுக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என தெளிவுபடுத்தி உள்ளார். அதேபோல் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியது முதலில் அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது. மக்களிடையே விஜய்க்கு இருக்கக்கூடிய பிம்பம் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை பிளவுபடுத்த கூடும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுவதாக கூறியுள்ளது.

ஓரணியில் தமிழநாடு நிகழ்ச்சியில் கனிமொழி:


தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுவது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பொழுது, தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றி கழகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விஜய்க்கு வாழ்த்து சொன்ன கனிமொழி:

தொடர்ந்து பேசிய அவர், “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு நிச்சயமாக சவாலாக இருக்காது வேண்டுமென்றால் அதிமுகவிற்கு சவால் இருக்கலாம். தனித்துப் போட்டியிடுவது என்பது அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம். எனவே தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் என சொன்ன விஜய்க்கு வாழ்த்துக்கள்.

ஆனால் வெற்றி என்பது நிச்சயமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தான் இருக்கும் இது மக்களின் வரவேற்பை பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது திமுக கூட்டணியில் யார் இணைவது என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார்” என தெரிவித்துள்ளார்