Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

Edappadi Palanisamy Condemns CM MK Stalin: திருநெல்வேலியில் மென்பொருள் பணியாளர் கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
எடப்பாடி பழனிசாமி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jul 2025 06:57 AM

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவ படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது, ஜாதி மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கவின் குமார் என்ற மென்பொருள் பணியாளர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். அதாவது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததன் காரணமாக, அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித், கவின் குமாரை பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் கவின்குமாரை சரம் மாறியாக வெட்டி கொலை செய்து தப்பிய உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 பேர் மீது வழக்குப்பதிவு:

காவல்துறையினர் சுர்ஜித்தை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கவின்குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

Also Read: திருப்பூரில் பயங்கரம்.. சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!

இதனைத் தொடர்ந்து கவின்குமாரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் சுர்ஜித் தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் தந்தை சரவணன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சுர்ஜித், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவான போலீஸ் தம்பதி:

சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது தாய் மற்றும் தந்தை தற்போது தலைமுறைவாக இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுர்ஜித் இன் தாய் மற்றும் தந்தை கிருஷ்ணகுமாரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் காவல்துறையில் பணியாற்றி வரும் நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Also Read: நெல்லை ஆணவக் கொலை.. கொலையாளியின் போலீஸ் பெற்றோர் சஸ்பெண்ட்

கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி:


இந்த ஆணவ படுகொலை தொடர்பாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ ஸ்டாலின் தலைமையிலான Failure மாடல் ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது , ஜாதி மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கவின் என்ற மென்பொறியாளர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், ஸ்டாலின் மாடல் காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அறிந்து, Failure Model அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடியா Failure மாடல் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.