Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாமக்கல்லில் அதிர்ச்சி.. 3 மகள்களை கழுத்து அறுத்து கொன்ற தந்தை.. பகீர் பின்னணி!

Namakkal Murder : நாமக்கல் மாவட்டத்தில் கடன் தொல்லையால் தனது மூன்று மகள்களை கழுத்து அறுத்து தந்தை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று மகள்களை கொடூரமாக கொலை செய்தார். பின்னர், அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

நாமக்கல்லில் அதிர்ச்சி.. 3 மகள்களை கழுத்து அறுத்து கொன்ற தந்தை.. பகீர் பின்னணி!
நாமக்கல் கொலை
Umabarkavi K
Umabarkavi K | Published: 06 Aug 2025 07:00 AM

நாமக்கல், ஆகஸ்ட் 06 : நாமக்கல் மாவட்டத்தில் மூன்று பெண் குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் இதுபோன்ற கொடூரத்தை தந்தை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், மனைவி மற்றும் மகனை ஒரு அறையில் பூட்டியதும் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், மூன்று மகள்கள் உள்ளனர். மேலும் ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது மனைவி பாரதி (30). இந்த தம்பதியின் நான்கு குழந்தைகளும் அதே பகுதியில் அரசு பள்ளியில் படித்து வந்தனர். இது கிடையில் கோவிந்தராஜ் புதிதாக அப்பகுதியில் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்.

இந்த வீட்டை வெளியே கடன் வாங்கி கட்டி இருக்கிறார். மொத்தமாக ரூ.20 லட்சம் கடன் வாங்கிய வீட்டை கட்டி இருக்கிறார். அதோடு, மனைவி பாரதியும் மகளிர் சங்கங்களில் குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று இருக்கிறார். ஆனால் அந்த கடனுக்கான தாவணி தொகையை கட்டுவதற்கு கோவிந்தராஜன் மற்றும் அவரது மனைவி சிரமப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. மாதத் தவணை கட்டாததால் வட்டி தொகை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதனால் கோவிந்தராஜ் சில நாட்களாக மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நினைவில் தான் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

Also Read : கணவனின் சந்தேகத்தால் மனமுடைந்த பெண்.. திருமணமான இரண்டே மாதங்களில் விபரீத முடிவு!

3 மகள்களை கழுத்து அறுத்து கொன்ற தந்தை

அதாவது பாரதி தனது ஒரு வயது மாணவன் தனி அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் ‌. மற்றொரு அறையில் மூன்று மகள்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். கோவிந்தராஜ் மட்டும் தனி அறையில் இருந்தார். நள்ளிரவுக்கு பின் அதிகாலை 3 மணி அளவில் கோவிந்தராஜ் எழுந்து அறிவால எடுத்து தனது மூன்று மதங்களையும் கழுத்தை அறுத்துக் கொன்றார்.

பின்னர் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்படும்போது, மூன்று மூன்று மகள்களும் வலி தாங்க முடியாமல் அலறி பிடித்துள்ளனர். இதனைக் கேட்ட பாரதி மகள்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் வெளிப்புறமாக கதை பூட்டப்பட்டிருந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. இதனால தாக்கப் பக்கத்தில் உள்ளவர்களும் சத்தம் கேட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

Also Read : அதிகரிக்கும் சைபர் கிரைம்.. ஜூலையில் மட்டும் ரூ. 1.65 கோடி மீட்பு – சென்னை காவல் துறை தகவல்..

வீட்டின் கதவை எடுத்து உள்ளே வந்து பார்த்த பொழுது மூன்று குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதே நேரத்தில், கோவிந்தராஜு சடலமாக கீழே கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் இருந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், நான்கு பேரும் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை அனுப்பி வருகின்றனர். கடன்சுமையால் தனது மூன்று மகள்களை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.