சிறுவன் கடத்தப்பட்டு கொலை.. ரூ.5 லட்சம் தராததால் ஆத்திரம்.. அதிர்ந்த பெங்களூரு!
Bengaluru Crime News : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின்போது, இவர்கள் இரண்டு பேரும் தப்ப முயன்றதால், போலீசார் அவர்களை சுட்டு பிடித்தனர்.

பெங்களூரு, ஆகஸ்ட் 01 : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 13 வயது சிறுவனின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது (Bengaluru Boy Kidnap Murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவை பகுதியைச் சேர்ந்தவர் ஜே.சி. அச்சித். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வருகிறது. இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். 13 வயது சிறுவன் தினமும் மாலை டியூஷன் செல்வது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று 13 சிறுவன் மாலை 5 மணிக்கு டியூஷன் சென்றிருக்கிறார். டியூஷன் சென்ற அவர் நீண்ட நேரம் ஆனது. இதனால், பதறிய தந்தை அச்சித், டியூஷனுக்கு சென்று அங்கு இருந்த ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார். அப்போது, அவர்கள் 7.30 மணிக்கு வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளனர். இதனால், டியூஷன் செல்லும் வழியில் தனது மகனை அச்சித் தேடியுள்ளார். அவரது சைக்கிள் அரேகெரேயில் உள்ள ப்ரோமிலி பூங்கா அருகே கிடந்துள்ளது.
சிறுவன் கடத்தப்பட்டு கொலை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அச்சித், உடனே ஹுளிமாவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், தந்தை அச்சித்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர் ரூ.5 லட்சத்தை தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், இதற்கு அச்சித் மறுத்துள்ளார். இதனால், போலீசார் சிறுவனை தீவிரமாக தேடிய நிலையில், சிறுவனின் சடலம் கக்கலிபுரா சாலையின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சிறுவனின் கை, கால்கள் கட்டப்பட்டு, எரிந்த நிலையில் கிடந்துள்ளார்.
Also Read : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!
இதனை அடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனை அடுத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது, பில்வரதஹள்ளியில் உள்ள அதே அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனை கொலை செய்த இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள் குருமூர்த்தி (25) மற்றும் கோபி (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலையாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்
கைது நடவடிக்கையின் போது போலீசார் தாக்கி, தப்பிக்க முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை சுட்டனர். குருமூர்த்தியின் இடது மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டது. அதேபோல, கோபிக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, ஆரம்ப சிகிச்சைக்காக ஜெயநகர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Also Read : சென்னையில் அதிர்ச்சி: மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு…
காவல் ஆய்வாளர் குமாரசாமி பி.ஜி. மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அரவிந்த் குமார் ஆகியோரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர்களாகப் பணிபுரிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுவனின் தந்தைக்கு அறிமுகமானவர்கள் என்பது தெரியவந்தது. சிறுவனின் குடும்பப் பின்னணியைப் பற்றி அறிந்த பிறகு, பணம் பறிக்கும் நோக்கத்துடன் அவர்கள் சிறுவனைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. ரூ.5 லட்சம் பணம் கேட்டும் கொடுக்காததல், சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை எரித்தது தெரியவந்துள்ளது.