பெங்களூரு பேருந்து நிலையத்தில் கிடந்த வெடிபொருட்கள்.. அதிர்ச்சியில் பயணிகள்.. விசாரணை தீவிரம்
Bengaluru Explosives Found At Bus Stand : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தின் கழிவறை அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, ஜூலை 23 : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்து நிலையத்தில் (Bengaluru kalasipalyam Bus Stand) வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையம் அருகே ஆறு ஜெலட்டின் குச்சிகள் ஒரு பிளாஸ்டிக் கவரில் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இது தொர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. நாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பது பெங்களூரு. பெங்களூரு நகரம் எப்போது பரபரப்பாகவே காணப்படும். அதிகளவிலான ஐடி கம்பெனிகள் இருப்பதால், எப்போது பிசியாகவே இருககும. அதேபோல, போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருக்ககும். இந்த நிலையில், 2025 ஜூலை 23ஆம் தேதியான இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையம் அருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள கலாசிபல்யா பேருந்து நிலையத்தின் கழிவறை அருகே மதியம் 2 மணியளவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழிவறைக்கு வெளியே ஒரு பிளாஸ்டிக் கவரில் ஆறு ஜெலட்டின் குச்சிகள் கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடி பொருட்களை மீட்டனர். மேலும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தனர். இது தொடர்பாக கலாசிபல்யா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வெடிப் பொருட்களை பேருந்து நிலையத்திற்கு யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறிய அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.




Also Read : பரபரப்பு.. டெல்லி ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
பேருந்து நிலையத்தில் கிடந்த வெடிபொருட்கள்
Bengaluru, Karnataka: Six gelatin sticks and several detonators were found in a carry bag placed outside the toilet at Kalasipalyam BMTC bus stand. Authorities are investigating the incident pic.twitter.com/GbmHkv8eHb
— IANS (@ians_india) July 23, 2025
இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை துணை ஆணையர் எஸ்.கிரிஷ், “கலாசிபல்யா பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு வெளியே ஒரு கேரி பேக்கில் ஆறு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் சில டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது வேண்டுமென்றே விடப்பட்டதா அல்லது மறந்துவிட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஜெலட்டின் குச்சியைத் தவிர வேறு எந்த வெடிபொருட்களும் இல்லை” என தெரிவித்தார்.
Also Read : மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கும் ஏர் இந்தியா.. மும்பையில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்ற விமானம்..!
இதற்கிடையில், பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், நெரிசலான பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக, கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதுகுறித்து விசாரணைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.