Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரபரப்பு.. டெல்லி ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?

Air India Flight : ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறங்கியபோது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதை அடுத்து, பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பரபரப்பு.. டெல்லி ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
ஏர் இந்தியா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jul 2025 22:03 PM

டெல்லி, ஜூலை 22: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறங்கியபோது, தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் வெளியேறும்போது, மின் அமைப்பில் தீப்பிடித்துள்ளது. இதனை அடுத்து, தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பயணிகள், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விமானத்திற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.  அண்மைக் காலங்களில் ஏர் இந்தியா விமானத்தில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்தே, அடுத்தடுத்து பல ஏர் இந்தியா விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால், பயணிகள் அச்சடைந்ததோடு, ஏர் இந்தியா விமானங்களில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர்.  இந்த சூழலில் தான், டெல்லியில் தரையிறங்கிய ஏர் விமானத்தில்  2025 ஜூலை  22ஆம் தேதியான இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விமானம் தரையிறங்கியபோது, பயணிகள் அனைவரும் வெளியேற தொடங்கினர். அப்போது தான், விமானம் தீப்பிடித்துள்ளது.

Also Read : புறப்படும்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்!

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து

இதனை ஏர் இந்தியா விமானம் உறுதிப்படுத்தி உள்ளது.  ஹாங்காங்கில் இருந்து  AI315 என்ற ஏர் இந்தியா விமானம் 2025 ஜூலை 22ஆம் தேதியான இன்று மாலை டெல்லி விமான நிலையத்தில்  தரையிறங்கியது. அந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் விமானம் தரையிறங்கியது. அப்போது, பயணிகள் அனைவரும் வெளியேற தொடங்கினர்.

Also Read : பறவைகள் விலங்குகள் மோதி 2000 விமான விபத்துகள்.. டெல்லிக்கு முதலிடம்.. கட்டுப்படுத்துவது எப்படி?

அந்த நேரத்தில் விமானத்தில் துணை மின் அலகில் இருந்து தீ பற்றி எரிந்தது.   இதனை அறிந்த விமான ஊழியர்கள் சில நிமிடங்களிலேயே தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதோடு, பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் ஏர் இந்தியா விமானம் தெரிவித்துள்ளது. விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும் ஏர் இந்தியா கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.