புறப்படும்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்!
Air India Flight Cancelled | ஜார்கண்டில் இருந்து டெல்லி புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஞ்சி, ஜூலை 21 : ஜார்கண்டில் (Jharkhand) இருந்து டெல்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் (Air India Flight), சரியாக விமானம் புறப்படும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், விமான ஊழியரகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரபு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து விரிவாக பார்க்கலாம்.
புறப்படும் போது ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நேற்று (ஜூலை 20, 2025) மாலை 6 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயராக இருந்தது. இந்த விமானத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிய நிலையில், விமான ஊழியர்கள் இறுதிகட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது விமான ஊழியர்கள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக ஜார்கண்டில் இருந்து டெல்லி செல்ல இருந்து அந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் விமான ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பயணம் செய்ய முடியாமல் தவித்துள்ளனர். இதன் காரணமாக பயணிகள் சிலர் விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அந்த சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
241 பேரை பலி வாங்கிய விமான விபத்து – கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும் ஏர் இந்தியா
ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஏர் இந்தியா விமானத்தில் மொத்தல் 242 பேர் பயணம் செய்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : Air India Crash : விமான விபத்து.. விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது.. ஏர் இந்தியா சுற்றறிக்கை!
விமான பயணிகள் மட்டுமன்றி, விமானம் மோதிய மருத்துவ கல்லூரில் விடுதியில் இருந்த மாணவர்கள் பலரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அதனை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் எச்சரிக்கையுடன் பணியாற்றி வருகிறது.