Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செல்போனில் பேசியவாறு சென்ற பெண்…பின்னால் வந்த டிராக்டர்…பதைபதைக்க வைக்கும் நிகழ்வு!

Gujarat Accident : குஜராத் மாநிலம், சூரத்தில் செல்போனில் பேசியவாறு சென்ற பெண் மீது டிராக்டர் மோதியதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

செல்போனில் பேசியவாறு சென்ற பெண்…பின்னால் வந்த டிராக்டர்…பதைபதைக்க வைக்கும் நிகழ்வு!
குஜராத்தில் பெண் மீது மோதிய டிராக்டர்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Feb 2026 12:26 PM IST

குஜராத் மாநிலம், சூரத் நகர் பகுதியில் அல்தான்-பதர் அருகே உள்ள இடத்தில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில், கட்டுமான பணிக்காக ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது, ஒரு பெண் செல்போனில் பேசியபடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த டிராக்டரை அதன் ஓட்டுனர் பின்னோக்கி இயக்கினார். எதிர்பாராத விதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது டாக்டரின் பின் பகுதி மோதியது. இதில், செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண் டாக்டரின் அடியில் சிக்கினார். இந்த விபத்தில், டிராக்டரின் டயரில் அந்த பெண் சிக்கியதுடன், பெரிய டயர் அந்த பெண் மீது ஏறி இறங்கியது. இதில், அந்த பெண் பலத்த காயமடைந்தார். உடனே, அந்த பெண் அலறியபடி சத்தமிட்டார். அப்போது, அங்கு, இருந்த நபர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினருக்கு பெரும் இழப்பாகியிருக்கும்

மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. அப்போது, அந்த டிராக்டரின் ஓட்டுனரிடம் அந்த பகுதியில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த டிராக்டரின் ஓட்டுநர் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அந்த பெண் கூறுகையில், எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஆதரவை இழந்திருப்பார்கள். இது எனது குடும்பத்தினருக்கு பெரிய இழப்பாக அமைந்திருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: Viral Video : சுடுகாட்டில் இருந்து உணவு டெலிவரி செய்த பெண்.. திகிலில் உறைந்த டெலிவரி ஊழியர்!

தலைமறைவான டிராக்டர் ஓட்டுநர்

மேலும், இந்த விபத்து தொடர்பாக, அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலீசார் டிராக்டரின் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அந்த டிராக்டரின் ஓட்டுனர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தலைமறைவாக இருந்து வரும் டிராக்டரின் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் காட்சிகள்

கட்டிட பணிகள் நடைபெற்று வரும் அந்த பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் இல்லாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: பிளாக் செய்ததால் ஆத்திரம்.. காதலனை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலி!