Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்.. இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி!

Bengaluru College Student Videos Goes Viral | பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தான் பல பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது சமூல வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்.. இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Feb 2026 23:21 PM IST

பெங்களூரு, ஜனவரி 30 : கர்நாடகா (Karnataka) மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகா, நாபோக்லு அருகே உள்ள செரியபரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முகமது சவாத் என்ற இளைஞர். இவர் பெங்களூரு (Bengaluru) சம்பிகேஹள்ளியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த இளைஞருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில், அவர் பல பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ

சவாத் பெண்களுடன் தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட இணைய வாசிகள் இந்த வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். அதுமட்டுமன்றி, இந்த வீடியோக்களை எடுத்த கல்லூரி மாணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், குடகு மேம்பாட்டு குழு தலைவர் பிரசன்னா பட், மடிகேரி புறநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!

கல்லூரி மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

புகாரின் அடிப்படையில் அந்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மாணவரின் செல்போனில் இருந்த ரகசிய வீடியோக்கள் எப்படி சமூக வலைத்தளங்களில் வெளியானது என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள்.. இந்திய மனநல மருத்துவர்கள் ஷாக் தகவல்!!

சமீப காலமாக ஆண், பெண்கள் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இளைஞர் பெண்களுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மாணவரின் கல்லூரி வட்டாரம் மற்றும் இணையத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.