Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!

Sabarimala Gold Theft Case: சபரிமலை தங்க திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகர் ஜெயராமிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவரிடம் வாக்கு மூலத்தை எஸ். ஐ. டி. குழு பதிவு செய்து கொண்டது.

சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!
தங்க திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 30 Jan 2026 11:53 AM IST

கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் துவார பாலகர் சன்னதியில் உள்ள தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளுக்காக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த பணிகள் முடிந்து கோவில் நிர்வாகத்திடம் தங்கம் ஒப்படைக்கப்பட்ட போது, அதில் சுமார் 4 கிலோ தங்கம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் உன்னி கிருஷ்ணன், அவரது பாட்டி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பாட்டியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நடிகர் ஜெயராமிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நடிகர் ஜெயராமன் அளித்த வாக்குமூலத்தை சிறப்பு புலனாய்வு குழு பதிவு செய்து கொண்டது.

நடிகர் ஜெயராமிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

விசாரணையின் போது, தங்க திருட்டு வழக்கில் முதன்மை குற்றவாளி உன்னி கிருஷ்ணனின் பாட்டியுடன், உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். அப்படி சென்ற போது தான் பொட்டியுடன் பழகியதாகவும், உன்னிகிருஷ்ணன் பொட்டி மூலமாகவே கோவர்தனனை தனக்கு தெரியும் என்று நடிகர் ஜெயராமன் தெரிவித்தார். மேலும், சபரிமலை கருவறைக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட தங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செழிப்பை தரும் என்று பொட்டி தன்னிடம் கூறினார்.

மேலும் படிக்க: மருதமலை முருகன் கோயில் தைப்பூசம்…இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

நடகர் ஜெயராம் வீட்டில் தங்க தகடுகள் வைத்து பூஜை

அதன் அடிப்படையில் தான் வீட்டில் பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் தான் பங்கேற்றதாக நடிகர் ஜெயராமன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்க தகடுகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டதற்கான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சபரிமலை தங்க திருட்டு வழக்கில் உன்னி கிருஷ்ணனின் பொட்டி சட்ட பூர்வ ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ள நேரத்தில் சிறப்பு விசாரணை குழுவின் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு

இதனிடையே, இந்த வழக்கில் எனக்கு நேரடி தொடர்பு கிடையாது என்று நடிகர் ஜெயராம் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், விசாரணையில் அவரது வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் அடுத்தடுத்து முக்கிய திருப்பங்கள் ஏற்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி…ஆனால் வனத்துறை வைத்த செக்…என்ன அது!