Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மருதமலை முருகன் கோயில் தைப்பூசம்…இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

Marudhamalai Traffic Changes: மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, இன்று முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் போக்குவரத்து மாற்ற அறிவிப்பை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மருதமலை முருகன் கோயில் தைப்பூசம்…இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
மருதமலையில் போக்குவரத்து மாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Jan 2026 08:09 AM IST

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக வருகை தருவார்கள். எனவே, கோவில் பகுதியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோயம்பத்தூர் மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயில் மலைப் பாதையில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

லாலி சாலை ரவுண்டானா பகுதியில்…

அதன்படி, மருதமலை லாலி சாலை ரவுண்டானாவில் இருந்து தமிழக வேளாண் கல்லூரி, பி. என். புதூர் முல்லை நகர் சோதனை சாவடி வழியாக மருதமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி மகாராணி அவென்யூ செம்மையா வித்தியாலயாவுக்கு செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து அருளா நகர் வழியாக அஞ்சலூர் சந்திப்பில் வலது புறம் திரும்பி பொம்மன்னன்பாளையம் சாலை வழியாக கல்வீரம்பாளையத்தை அடைந்து மருதமலைக்கு செல்ல வேண்டும். இதே போல, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் பாரதியார் பல்கலைக்கழக 2- ஆவது நுழைவு வாயில் வழியாக தொலை முறை கல்வி கூட வளாகம் வழியாக வர வேண்டும்.

மேலும் படிக்க: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரித்து ஏன்?.. காரணத்தை விளக்கிய மத்திய அரசு..

தற்காலிக பேருந்து நிலையம்

அங்கு, பயணிகளை ஏற்றவும், இறக்கி விடவும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்பட சிறிய வாகனங்கள் அனைத்தும் மருதமலை அடிவாரம் தைலக்காடு வரை மட்டுமே சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும். மேலும், தடாகம் சாலை இடையார்பாளையம் சந்திப்பில் இருந்து வடவள்ளி வட்டச் சாலை வழியாக மருதமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கல் வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலைக்கு செல்ல வேண்டும்.

பிப்ரவரி 2- ஆம் தேதி வரை…

அதேபோல, சிறுவாணி சாலை தொண்டாமுத்தூரில் இருந்து கோயம்புத்தூர் நகரப் பகுதிக்கு வரும் அனைத்து விதமான வாகனங்களும் அஞ்சனூர் சந்திப்பு பொம்மன்னன்பாளையம் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேடப்பட்டி, பூசாரி பாளையம் சாலை வழியாக வெளியே வந்து, தடாகம் சாலையில் செல்லலாம். மேலும், தடாகம் சாலை, லாலி சாலை சந்திப்பு வழியாகவும் இடையார்பாளையம் சாலை, வடவள்ளி ரவுண்டானா வழியாகவும், தொண்டாமுத்தூர் சாலை வழியாகவும் அனைத்து விதமான வாகனங்களும் வருகிற பிப்ரவரி 2- ஆம் தேதி இரவு 10 மணி வரை மருதமலை வடவள்ளி சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “தேர்தல் நெருங்குவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டது”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு கருத்து