Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.5.5 கோடி சுருட்டிய மர்ம நபர்…ஒரே லிங்குதான் எல்லாம் போச்சு!

Puducherry Cheating: புதுச்சேரியில் பிரபல தொழிலதிபரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ஆன்லைன் லிங்க் மூலம் ரூ.5.5 கோடியை சுருட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.5.5 கோடி சுருட்டிய மர்ம நபர்…ஒரே லிங்குதான் எல்லாம் போச்சு!
புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.5.5 கோடி நூதன மோசடி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Jan 2026 07:17 AM IST

புதுச்சேரி மாநிலம், ரெயின்போ நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் வழியாக ஒரு மெசேஜ் வந்ததாக கூறப்படுகிறது. அந்த மெசேஜில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அந்த பிரபல தொழிலதிபர் பதில் அளித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அந்த மெசேஜை அனுப்பிய நபர், தொழிலதிபரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ஆன்லைன் மூலம் எவ்வாறு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை தொழிலதிபருக்கு, அந்த நபர் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த நபர் ஒரு ஆன்லைன் லிங்கை அந்த தொழிலதிபரின் செல்போன் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பி இதனை கிளிக் செய்து உள்ளேன் செல்லுமாறு கூறியுள்ளார்.

ரூ.5 ஆயிரம் முதலீட்டுக்கு ரூ.3 ஆயிரம் லாபம்

அதன்படி, அந்த லிங்கை தொழிலதிபர் கிளிக் செய்து உள்ளே சென்று கேட்கப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. பின்னர், தொழிலதிபரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனையும் உண்மை என நம்பிய தொழிலதிபர் ஆரம்பத்தில் ரூ. 5 ஆயிரம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவருக்கு ரூ. 3 ஆயிரம் லாபம் கிடைத்ததாக தெரிகிறது. இதில், பெரிதளவில் ஈர்க்கப்பட்ட அந்த தொழிலதிபர் தொடர்ந்து மேலும் மேலும் முதலில் செய்துள்ளார்.

மேலும் படிக்க: விருதுநகரில் 2 முறை நில அதிர்வு – பீதியில் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்

ரூ.5.5 கோடி வரை முதலீடு செய்த தொழிலதிபர்

அப்படியாக, அவர் சுமார் ரூ. 5.5 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த முதலீட்டுக்கான லாப தொகை அவரது செல்போனுக்கு அனுப்பப்பட்ட லிங்கில் காண்பித்துள்ளது. பின்னர், ஒரு கட்டத்தில் அந்த லாபத் தொகையை தனது வங்கி கணக்கிற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் மாற்ற முடியவில்லை. பின்னர், இது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கிய நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அவரது செல்போனில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது, முடியாமல் போனது.

இணையவழி குற்றத்தடுப்பு போலீசாரிடம் புகார்

இதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அந்த தொழில் அதிபர் உணர்ந்தார். பின்னர் இது தொடர்பாக புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் உள்ள இணைய வழி குற்ற தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் அந்த தொழிலதிபர் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: Are You Illegal Entry…கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர்…கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை!