இனி வெப் வாட்ஸ்அப்பிலும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. விரைவில் அறிமுகமாகும் அசத்தல் அம்சங்கள்!
Audio and Video Call Feature In Web WhatsApp | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வெப் செயலியை பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், மொபைல் வாட்ஸ்அப் செயலியில் உள்ளதை போலவே வெப் வாட்ஸ்அப்பிலும் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய மெட்டா முடிவு செய்துள்ளது.
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். பொழுபோக்கு, தகவல் பரிமாற்றம் என அனைத்திற்கும் வாடஸ்அப் செயலி பயனுள்ளதாக உள்ளதால், பலருக்கும் இது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இவ்வாறு ஏராளமான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில், அதில் பல்வேறு அட்டகாசமான மற்றும் புதிய அம்சங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில், விரைவில் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாக உள்ள ஒரு அட்டகாசமான அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெப் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனர்கள்
மொபைல்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதை போலவே ஏராளமான பயனர்கள் லேப்டாப் மாற்றும் டெஸ்க்டாப் ஆகியவற்றில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். மொபைல்போனில் பயன்படுத்துவதை போல் இல்லாமல், லேப்டாப் மற்றும் டெஸ்க் டாப்பில் வெப் வாட்ஸ்அப் (Web WhatsApp) மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், மொபைல் செயலியில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த வெப் வாட்ஸ்அப்பில் கிடைக்காது. குறிப்பாக ஆடியோ, வீடியோ கால்களை இந்த வெப் வாட்ஸ்அப்பில் மேற்கொள்ள முடியாது.
இதையும் படிங்க : ஆப்பிள் முதல் ஒன்பிளஸ் வரை.. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
மொபைல் போனில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியை போல இந்த வெப் வாட்ஸ்அப் எளிமையானதாக இல்லை என்றும், மொபைல் வாட்ஸ்அப் செயலியில் உள்ள சில சிறப்பு அம்சங்களை வெப் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என பயனர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக வெப் வாட்ஸ்அப்பில் முக்கிய சில அம்சங்களை கொண்டு வருவதற்கான பணியில் மெட்டா இறங்கியுள்ள்து.
வெப் வாட்ஸ்அப்பில் வரப்போகும் அட்டகாசமான அம்சங்கள்
மொபைல் வாட்ஸ்அப் செயலியில் உள்ளதை போலவே வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வாய்ஸ் கால் (Group Voice Call) மற்றும் வீடியோ கால் (Video Call) ஆகிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. நிறுவனங்களில் ஊழியர்கள் தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தினாலும் மீடிங் சமயத்தின் போது கூகுள் மீட் (Google Meet), சூம் (Zoom) ஆகிய செயலிக்ளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே தான் வாட்ஸ்அப் இந்த அட்டகாசமான அம்சங்களை வாட்ஸ்அப் வெப்பில் கொண்டுவர உள்ளது குறிப்பிடத்தக்கது.