Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆப்பிள் முதல் ஒன்பிளஸ் வரை.. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

Amazon Great Republic Day Sale | அமேசான் நிறுவனம் தனது கிரேட் ரிபப்ளிக் டே சேலை அறிவித்துள்ளது. இதில் ஆப்பிள், ஒன்பிளஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் முதல் ஒன்பிளஸ் வரை.. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jan 2026 12:38 PM IST

இந்தியாவின் மிக முக்கிய இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள அமேசான் தனது கிரேட் ரிபப்ளிக் டே சேலை (Amazon Republic Day Sale) அறிவித்துள்ளது. ஜனவரி 16, 2026 நள்ளிரவு முதல் தொடங்கும் இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், அழகு சாதன பொருட்கள் என அனைத்தும் 80 சதவீதம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த சேலில் ஆப்பிள், சாம்சங், சோனி, ஒன்பிளஸ், எல்ஜி, ஜியோமி, போட், டிசிஎல், எச்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் – ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி

ஒன்பிளஸ் நோர்டு 5

ரூ.34,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்டு 5 (OnePlus 15 Nord) ஸ்மார்ட்போன் அமேசான் சேலில் வெறும் ரூ.30,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 SoC பிராசசர், 50 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? இன்ஸ்டாகிராம் தான் காரணமா? எப்படி தவிர்ப்பது?

ஐபோன் 15

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 (iPhone 15) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.59,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் சேலில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.50,249-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 15 ஆர்

ஒன்பிளஸ் 15 ஆர் (OnePlus 15 R) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த அமேசான் சேலில் வெறும் ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசசர் அம்சத்தையும், 7400 mAh பேட்டரி அம்சத்தையும்  கொண்டுள்ளது.

இதையும் படிங்க : அடிக்கடி போனில் வரும் நோட்டிஃபிகேஷன்களால் தொல்லையா? அப்போ இதை டிரை பண்ணுங்க

iQOO15

iQOO15 ஸ்மார்ட்போன் ரூ.72,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் சேலில் வெறும் ரூ.65,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.