Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? இன்ஸ்டாகிராம் தான் காரணமா? எப்படி தவிர்ப்பது?

Smartphone Battery Tips: நாம் போனில் அடிக்கடி சார்ஜ் குறையும் பிரச்னைக்கு பின்னால் இன்ஸ்டாகிராம் காரணமாக இருக்கலாம் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் இன்ஸ்டாகிராம் பன்படுத்தாதபோதும் அது பின்னணியில் தொடர்ந்து இயங்குவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையை எப்படி சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? இன்ஸ்டாகிராம் தான் காரணமா? எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jan 2026 13:26 PM IST

சமீப காலமாக முழுமையாக சார்ஜ் செய்த பிறகும், ஸ்மார்ட்போன் (Smartphone) பேட்டரி மிக விரைவாக காலியாகிவிடுவதை பலரும் கவனித்திருப்பார்கள். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்படங்கள் பார்ப்பதுடன் மட்டுமல்லாமல், வீடியோக்கள், ரீல்ஸ், லைவ் வீடியோக்கள் மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற பல வசதிகளை ஒரே செயலியில் வழங்குவதால், இது போனின் பேட்டரியை அதிகமாக பயன்படுத்துவதாக தெரிவிக்க்கின்றனர்.  இதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமால் விரைவில் காலியாகும் போன் பேட்டரி

இன்ஸ்டாகிராம் செயலியை பயனர் பயன்படுத்தும் நேரத்தில் மட்டுமல்லாமல், பின்னணியிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. புதிய அறிவிப்புகளை அனுப்புதல், கண்டென்ட் தானாக அப்டேட் ஆவது போன்ற காரணங்களுக்காக போனின் இண்டெர்நெட்டையும், பேட்டரி பவரையும் தொடர்ந்து பயன்படுத்துகிறது. குறிப்பாக  போனின் நெட்வொர்க் பலவீனமாக இருக்கும் நேரங்களில், பேட்டரி பவர் மேலும் குறைகிறது.

இதையும் படிக்க : இந்த 2 செட்டிங்க்ஸை உடனே பண்ணுங்க.. இல்லனா உங்க ஜிமெயில் ஏஐ-க்கு இரையாகிடும்!

கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் வீடியோ கன்டென்ட்களை அதிகம் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இந்த வீடியோக்கள் அதிக குவாலிட்டியுடன் வருவதால், ஸ்கிரீன், இண்டர்நெட் ஆகியவற்றுக்கு அதிக சுமை ஏற்படுகிறது. அதோடு, ஆட்டோமேட்டிக் அப்டேட் வசதி காரணமாக, ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்தது தானாக இயங்குகிறது. பயனருக்கு தெரியாமலேயே இந்த செயல்முறை நடைபெறுவதால், பேட்டரி வேகமாக காலியாகிறது.

மேலும், இன்ஸ்டாகிராம் செயலி நமது லொகேஷன், கேமரா, மைக் போன்ற அனுமதிகளை பயன்படுத்துகிறது. ஸ்டோரி அல்லது ரீல் உருவாக்கும் போது, கேமரா நீண்ட நேரம் இயங்குவதால் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கிறது. நாம் அடிக்கடி பயணிப்பவர்களாக இருந்தால், ஜிபிஎஸ் பயன்பாடு கூடுதலாகி, பேட்டரி பவரை மேலும் குறைக்கும். புதிய அப்டேட் செய்யப்படாத இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துபவர்களுக்கும் இந்த சிக்கல் அதிகமாக இருக்கும். பழைய அப்டேட்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள், பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும்.

இதையும் படிக்க : இனி ஃபேஸ்புக் மூலம் சைபர் ஸ்கேம் நடப்பதை சுலபமாக தடுக்கலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!

தவிர்ப்பது எப்படி?

பொதுவாக, இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் பேட்டரி பயன்பாடு மேம்படுத்தப்படும். ஆனால் செயலி மற்றும் போன் சாஃப்ட்வேரை அப்டேட் செய்யாமல் விட்டால், சார்ஜ் விரைவாக காலியாகும் நிலை உருவாகலாம்.  இந்த பேட்டரி சிக்கலை குறைக்க சில எளிய மாற்றங்களை செய்யலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமில் வீடியோக்களுக்கான ஆட்டோமேட்டிக் ஸ்குரோலிங் வசதியை நிறுத்தலாம். தேவையற்ற நோட்டிஃபிகேஷன்களை கட்டுப்படுத்தலாம். இன்ஸ்டாகிராம் செயலியும் போன் சாஃப்ட்வேரும் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்தால், பேட்டரி செயல்திறன் மேம்படும்.

இன்ஸ்டாகிராமை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதை முறையாக பயன்படுத்தினால், பேட்டரி விரைவாக காலியாகும் பிரச்னையை கணிசமாக குறைக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.