Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Year Ender 2025 : 2025-ல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!

Features Introduced In Instagram In 2025 | மெட்டா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் சில அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் மெட்டா அறிமுகம் செய்துள்ள முக்கிய மற்றும் அட்டகாசமான அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Year Ender 2025 : 2025-ல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Dec 2025 13:49 PM IST

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை போலவே உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலிகளில் ஒன்று தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலியில் பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம் என பல்வேறு அசத்தல் அம்சங்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக இது பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. என்னதான் இன்ஸ்டாகிராம் செயலியில் பல அட்டகாசமான அம்சங்கள் இருந்தாலும், பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், மெட்டா தொடர்ந்து பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செயலியில் மெட்டா அறிமுகம் செய்துள்ள அசத்தலான அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் 2025-ல் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்

2025 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட், ஃபிரண்ட்ஸ், மேப், ரீல்ஸ், ஏஐ எடிட்டிங், கிரிட் ஆகிய பல அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரீபோஸ்ட்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரு அட்டகாசமான அம்சம் தான் ரீபோஸ்ட் (Repost). இந்த அம்சத்தை பயன்படுத்தி, ஒருவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வேறு ஒரு நபர் ரீபோஸ்ட் செய்யலாம். அதுமட்டுமன்றி, அவ்வாறு ரீபோஸ்ட் செய்யும் ரீல்ஸ்களில் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்வதற்கான நோட் (Note) அம்சமும் அதில் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : இணையத்தை பயன்படுத்தும்போது உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஃபிரண்ட்ஸ்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அதிலும் குறிப்பாக தாங்கள் பார்க்கும் ரீல்ஸ்களை தங்களது நண்பர்களுக்கு அனுப்பி மகிழும் பழக்கமும் பலருக்கும் உள்ளது. இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ரீல்ஸ் அனுப்புவதற்கு பதிலாக நண்பர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ரீல்ஸ்களை பார்க்க இந்த ஃபிரண்ட்ஸ் (Friends) அம்சம் உதவும்.

மேப்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்களில் ஒன்று தான் மேப் (Map). இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒருவர் தான் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தனது நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். அதாவது, ஒருவர் தான் இறக்கும் இடத்திற்கான லொகேஷனை (Location) ஷேர் செய்ய முடியும். இந்த லொகேஷன் ஷேர் செய்வதை அனைவருக்கும் மொத்தமாகவும், அல்லது விருப்பப்பட்ட நபர்களுக்கு மட்டும் தனியாகவும் தெரியப்படுத்த முடியும்.

இதையும் படிங்க : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

நீட்டிக்கப்பட்ட ரீல்ஸ் நேரம்

இன்ஸ்டாகிராமில் வந்த முக்கிய அம்சங்களில் ஒன்று தான் ரீல்ஸ் நேரம் (Reels Duration) நீட்டிக்கப்பட்டது. முன்னாதாக 15, 30, 60, 90 விநாடிகள் வரை ரீல்ஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2025-ல் 20 நிமிடங்கள் வரை ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்ய மெட்டா அனுமதி வழங்கி புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இது பலருக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாக அமைந்தது.

ஏஐ எடிட்டிங்

மெட்டா வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தை அறிமுகம் செய்தது. ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) மூலம் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்ட நிலையில், இன்ஸ்டகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்யும் விதமாக ஏஐ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பலருக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது.

இதையும் படிங்க : திருடப்பட்ட போனின் லொகேஷனை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கும் தெரியுமா?

அல்காரிதம்

ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன வகையான வீடியோக்கள் வர வேண்டும் என அந்த நபரே தேர்வு செய்யும் வகையில் அல்காரிதம் (Algorithm) அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்தது. இதன் மூலம் தங்களுக்கு பிடித்தமான வகையில், பயனர்கள் தங்களுக்கு வரும் வீடியோக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும்.

ஸ்டோரி ஸ்கெடியூல்

முன்பெல்லாம் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி (Story) போட வேண்டும் என்றால் அப்போதே போட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அவ்வாறு அந்த ஸ்டோரியை போடவில்லை என்றால் அது டிராஃப்டுக்கு (Draft) சென்றுவிடும். இந்த நிலையில் தான் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஸ்கெடியூல் செய்யும் அம்சத்தை (Story Schedule Feature) மெட்டா அறிமுகம் செய்தது. இதன் மூலம் தங்களுக்கு தேவையான நேரத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஒருவர் ஸ்கெடியூல் செய்துக்கொள்ள முடியும்.