இணையத்தை பயன்படுத்தும்போது உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
How To Prevent Your Privacy and Data | இணையத்தை பயன்படுத்தும்போது உங்களது தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சில அம்சங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் தரவுகள் மற்றும் விவரங்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதிரி புகைப்படம்
- பெரும்பாலான நபர்கள் தங்களது தகவல்கள் டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயலிகளில் பாதுகாப்பாக உள்ளதாக நினைக்கின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. நீங்கள் ஒருமுறை வைஃபை நெட்வொர்க்கில் உங்களது ஸ்மார்ட்போனை இணைக்கும் பட்சத்தில் உங்களது தகவல்கள் மற்றும் தரவுகள் சேகரிக்கப்படும்.
- இவ்வாறு வைஃபை மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படாமல் இருக்க சில விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் திருடப்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- ஜீரோ லாக் விபிஎன் (Zero Log VPN) அம்சத்தை பயன்படுத்தி இணைய சேவையை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தலாம். ஜீரோ லாக் விபிஎன் பயன்படுத்தும்போது உங்களுடைய ஐபி முகவரி இணைய சேவை, இணையதளங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து உங்களது தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்.
- பல வகையான இணைய சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் உங்களது தரவுகள் மற்றும் விவரங்கள் திருடப்படுவதை உங்களால் தடுக்க முடியும். அதாவது, நீங்கள் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்களது தரவுகள் மற்றும் தகவல்கள் மிக சுலபமாக திருடப்படுபதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இணைய சேவையை மாற்றி மாற்றி பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.
- ஒவ்வொரு செயலியையும் பதிவிறக்கம் செய்து அதற்குள் செல்லும்போது உங்களிடம் அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் உங்களது தரவுகள் சேகரிக்கப்படும். எனவே உங்களது செயலிகள் உங்களின் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து அவ்வப்போது சோதனை செய்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.




