AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க.. செய்ய வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்..

ஒரு வீட்டில் தொடர்ச்சியான சண்டைகள், நோய்கள், பண நஷ்டம் போன்றவை ஏற்பட்டால், அங்கு நேர்மறை சக்தி குறைந்திருக்கலாம் என ஆன்மீகமாக கருதப்படுகிறது. இதற்கு பயப்படாமல், தெய்வ நம்பிக்கையை வலுப்படுத்தி, விளக்கு, பூஜை, சுத்தம் போன்ற எளிய வழிகளில் இறை சக்தியை அதிகரிக்கலாம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Feb 2026 14:45 PM IST
வீட்டில் இறை சக்தி நிறைந்து, மன அமைதி மற்றும் நல்ல சக்தி நிலைத்திருக்க பெண்களின் பங்கு மிக முக்கியமானது. நாம் இருக்கும் இடத்தில் ஒரு நேர்மறை சக்தி உருவாக வேண்டும் என்றால், அதற்கான அடிப்படை மாற்றங்கள் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.

1 / 5
முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருக்கும் தேவையற்ற பழைய பொருட்கள், கிழிந்த உடைகள், பயன்பாடற்ற காகிதங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். இதனால் வீட்டில் இருந்த அழுத்தமான உணர்வும், இருளான மனநிலையும் மாறி, லேசான மற்றும் அமைதியான சூழல் உருவாகும். சுத்தமான வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஆன்மீக நம்பிக்கை.

2 / 5
தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பழக்கம். அதிக நேரம் பூஜை செய்ய முடியாவிட்டாலும், காலை எழுந்து முகம் கழுவி ஒரு விளக்கு ஏற்றி, ஒரு பூ வைத்து, தூபம் அல்லது ஊதுபத்தி காட்டினாலே போதும். இது வீட்டில் தெய்வாம்சத்தை நிலைநிறுத்தும். ஒரு கல் அல்லது சின்ன மூர்த்தியை வைத்து, மனதார பிரார்த்தனை செய்தால் அதற்கும் மந்திர பலம் கிடைக்கும்.

3 / 5
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜை, செவ்வாய்க்கிழமைகளில் வேல் பூஜை போன்ற எளிய வழிபாடுகளை வீட்டிலேயே செய்யலாம். மாதம் ஒருமுறை அல்லது அவ்வப்போது சிறு பூஜைகள் செய்வதும் நல்லது.

4 / 5

5 / 5
Follow Us